10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஆற்றியபணி உன்னதபணியாகும்………[:]

[:ta]

எமது ஊரின் முனைவில் இருந்து அருள்பாலித்து வரும் நீர்வேலி கந்தப்பெருமானின் திருவிழாக்காலம் மிகவும் சிறப்பாக நடந்தேறியிருக்கின்றது. கொடியேற்றமான முதல் நாள் தொடங்கி இறுதிநாள் வரை ஒவ்வொரு நாளும் திருவிழாவினை படமெடுத்து முகநூலில் பதிவேற்றி வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் பார்த்து மகிழ்வதற்கு திரு.இ.தயாபரன் அவர்கள் ஆற்றிய பணி உன்னதமானது. ஒவ்வொரு மனிதனின் நேரமும் உடல் உழைப்பும் விலை மதிப்புள்ளவை. அவற்றிற்கு பெறுமதி உண்டு. நம்மில் பலர் இன்ரநெற்றில்  இலகுவாக படங்களை பார்த்துவிட்டு விமர்சனங்களை அள்ளி வழங்கிவிட்டு  நழுவி  சென்றுவிடுவார்கள்.  அதன் பின்னால் இருக்கும் வலிகளை யாரும் அறிவதில்லை. உணர்வதில்லை.ஏளனமாகவே இதனையும் பார்த்துச் செல்வார்கள்.   இணையத்திற்காக செலவு செய்த பணம்  மற்றும் உடல் உழைப்பு நேரம்  இவை எதனையும் கருதாது தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக  திரு.இ.தயாபரன் அவர்கள் ஆற்றியபணி உன்னதமானது. அதற்காக அவரை பாராட்டுவதுடன் அனைவரினதும் சார்பாக உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

 [:]

0 Comments

Leave A Reply