10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தந்தை மகனுக்கும் எழுதும் கடிதம் ………

என் அன்பு மகனே !
இங்கு நானும் என் மனைவியும் நலம் !
நீயும் உன் மனைவியும் நலமா !

நீ அலைந்து  திரிந்து கொண்டு வந்து சேர்த்தாயே முதியோர்  இல்லம் உலக‌ தரம் மிக்கதாம் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள் ! இப்பொழுதுதான் உன்னை பெற்றதில் பெருமைபடுகிறேன் !  அன்று உனக்கு உணவு  ஊட்ட‌ நிலாவை காட்டினேன் இன்றும் அதே நிலா அங்கயே ! நான் பெற்ற மகனே நீ என் அருகில் இல்லையே அந்த‌ நிலவும் ஏளனாமாய் சிரிக்கிறது என்னை பார்த்து ! உன் கால்கள் தடு்மாறும் போது என் தோள்கள் தந்தேன். இன்று என் கால்கள் தடுமாறுகிறது உன் தோள்கள் வேண்டாம். ஒரு ஊன்று கோலை மட்டுமாவது வாங்கிக் கொடு !!இரத்ததை பாலாய் ஊட்டிய உன் அன்னையோ இன்று இரத்தமே இல்லாமல் வெறும் ஓடாய் திரிகிறாள் !!


உனக்காக ஓடி ஆடிய என் கால்களோ
இன்று நடக்க‌ கூட‌ முடியாமல் நடுங்கிக்கொண்டிருக்கிறது !

இறைவனிடம் மன்றாடி வேண்டிக் கொள்கிறேன் எனக்கு இன்னொரு பிறவி இருந்தால் அதை உடனே நிறுத்திவிடு !

ஏழு ஜென்மத்தில் அடைய வேண்டிய‌ இன்பத்தை ஒரே ஜென்மத்தில் அடைந்து விட்டேன்……!!!

உன்னை பெற்றதால் !
போதும் அப்பா !! போதும் !!!

நம்மை பெற்றெடுத்த தெய்வங்களை போற்றி பாதுகாப்போம்…

இந்த நிலைமை எவருக்கும் வரவேண்டாம் என்று பிரார்த்தனை செய்வோம்

13406907_1146093945411336_5007630981148186895_n

 

0 Comments

Leave A Reply