10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தபால்த்தலை வெளியீடு சிறக்கட்டும்……………………..சிறப்புப்பக்கம்

lநீர்வேலி  எமது கிராமம்.நீர்வேலியில் பிறந்ததினால் நாம் பெருமையடையவேண்டும்.நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் உலகின் எந்த மூலையிலும் எங்கு சென்றாலும் எமதூரை மறக்கவோ  போற்றாமல் இருக்கவோ முடியாது.எமது உறவுகள் நாட்டுநிலமை காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்தாலும் எமதூரில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையினை அவர்களால் மறக்கமுடியாது.அவர்கள் வணங்கிய கோவில்கள் படித்தபாடசாலைகள் விளையாடிய திடல்கள் ஓழுங்கை ஒழுங்கையாய் திரிந்த இடங்கள் நீச்சல் அடித்த குளங்கள் வயல்கள் வாழைத்தோட்டங்கள் பனைவடலிகள்  திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் வெளிநாடுகளில் வசதிகூடிய வாழ்கையில் இருந்தாலும் அவர்கள் அடிமனதில் என்றும் பசுமையாகவே இருந்து கொண்டே இருக்கும்.முகநுால்களிலும் இணையத்தளங்களிலும் எமதூர் தொடர்பாக ஏதாவது ஒரு செய்தி வரும் போது ஓடோடிச்சென்று வாழ்த்துவதும் பார்ப்பதுவும் லைக் பண்ணுவதும் செயர் செய்வுதும் அதன் பின்னர் நண்பர்களிடம் அது தொடர்பாக கலந்துரையாடுவதும் அவர்கள் மனதில் நீர்வேலியில் வாழ்ந்த வாழ்க்கை எள்ளளவும் குறையாமல் இருப்பதனை உணர்த்துகிறது.எமது புலம்பெயர் நீர்வேலி உறவுகள் மேற்கொண்டுவரும் ஒன்றுகூடல்கள் விளையாட்டுப்போட்டிகள் கலைநிகழ்வுகள் என்பனவும் அவர்களின் உன்னதமான பற்றை ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன.

 நீர்வேலியில் உள்ள மக்களிடம் என்றும் அழியாத கல்விப்பாரம்பரியத்தினை உருவாக்கியதில் அத்தியார் இந்துக்கல்லூரி முக்கியமானது.இங்கு படித்து வெளியேறிய பல்லாயிரம் மாணவர்கள் நல்லநிலையில் எல்லா இடமும் பரந்து வாழ்கின்றனர்.முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்கள் அத்தியார் இந்துக்கல்லூரியை உருவாக்கியமைக்கு நீர்வேலியைச்சேர்ந்த அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும்.இருக்கின்றார்கள்.அந்தவகையில் கனடாவில் வதியும் அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களுக்கு தபால்தலையினை வெளியிட்டு அத்தியார் அவர்களை கௌரவப்படுத்துகின்றனர்.இது ஒரு போற்றத்தக்க முயற்சியாகும்.எமக்கு இந்த தபால்தலை வெளியீடானது எமக்கு பேரானந்தத்தை தருகிறது.இந்த உயரிய முயற்சிக்கு எமது நீர்வேலி இணையத்தளம் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் தபால்த்தலை வெளியீட்டு நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறவும் மேலும் நீங்கள் மேற்கொள்கின்ற  அனைத்து எமதூர் சார்ந்த நிகழ்வுகளும் வெற்றிபெற எமது உளங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                                                                                      நன்றி

                                                                                                                                                 –நியூ நீர்வேலி இணையம்

…………………………………………………………………………………………………………………………………………………….

அரசகேசரி விநாயகர் கோவில் குரு முதல்வரின் உள்ளத்தில் இருந்து………..

IMG_1172
நீர்வையம்பதியில் கல்விப்புலத்தில் முக்கிய இடத்தினை வகிக்கும் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் இருந்து கற்று வெளியேறிய கனடாவில் வதியும் பழைய மாணவர்கள் மேற்கொள்கின்ற உயரிய பணிசிறக்கவும் தபால்த்தலை வெளியீடு  மிகச்சிறப்பாக நடைபெறவும் எல்லாம்வல்ல நீர்வேலி அரசகேசரி விநாயகனை வேண்டிக்கொள்கிறேன்.

பிரம்மசிறி சோமதேவக்குருக்கள்

நீர்வேலி

……………………………………………………………………………………………………………………………….

அத்தியாருக்கு முத்திரை பதிப்பிக்கும் நீர்வையின் புத்திரர்களைப்
வாழ்த்துகின்றோம்……………..

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களாலும் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச பண்டிதர்
அவர்களாலும் இன்னோரன்ன பெரியவர்களாலும் நீர்வை மண்ணில் விதைக்கப்பட்ட
அறிவு விதைகள் அப்படியே காய்ந்து கருகி விடப்போகிற ஒரு இருண்டகாலத்தில்
இறைவனால் அனுப்பப்பட்ட நீர்வைமண்ணின் மறுமலர்ச்சிக்கான நல் வித்து
முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களாவார்.

உள்ளத்தூய்மையும், உயரிய வாழ்வும், தனக்கென வாழாத பேராண்மையும் பூண்ட
அறிவுச் செல்வரான அத்தியார் அருணாசலம் அவர்கள் செய்த நற்பணிகள் பற்பல…
அவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல விளங்குவது தான் நீர்வை மண்ணில்
ஒரு இந்துக்கல்லூரியை ஸ்தாபித்தமை ஆகும்.

இத்தகு நற்பணியாளரைக் கௌரவிக்கும் முகமாக கனடா வாழும் அத்தியார்
இந்துவின் மைந்தர்களும், நற்பணியாளர்களும் அத்தியாருக்கு முத்திரை
வெளியிடுவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்கள் செய்கின்ற இந்தச் செயற்பாடு பாராட்டுவதற்குரியது. போற்றிப்
புகழ்வதற்குரியது. நீர்வை மண்ணுக்கு உழைத்த அத்தியாருக்கு உலகளாவிய ஒரு
அங்கீகாரத்தையும், உலகளாவிய சிறப்பையும் அளிக்கக் கூடிய நிகழ்ச்சி…

ஆகவே, இப்பணிகளில் முன்னின்று உழைக்கும் அனைவருக்கு செல்லக்கதிர்காமத்து
இறைவனின் திருவருள் உண்டாக வேண்டும். அத்தியார் அவர்களின் அன்பு சால்
ஆசிகள் சித்திக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.. எல்லோருக்கும்
எம் வாழ்த்துக்கள்…

‘நீர்வை மணி’ சிவஸ்ரீ. கு.தியாகராஜக்குருக்கள்
நீர்வை தி.மயூரகிரி சர்மா

…………………………………………………………………………………………………………………………….

nnn

                                                                வாழ்த்துச்செய்தி
நீர்வையூரில் அருளாட்சி செய்கின்ற கலியுகவரதனாகிய   கந்தப்பெருமான் திருவருளால்,அத்தியார் இந்துக்கல்லூரியை நம் மண்ணில் ஸ்தாபித்த பெருமகனாருக்கு கனடா வாழும் மேற்படி கல்லூரி மாணவர்கள் முத்திரை பதிப்பிப்பது அறிந்து மகிழ்கின்றோம்.. அவர்கள் எல்லோருக்கும் நம் வாழ்த்துக்கள்..
         
 -சிவஸ்ரீ. இராஜேந்திர ஸ்வாமிநாதக்குருக்கள்..

IMG (1)

………………………………………………………………………………………………………

Image

 

 

…………………………………………………………………………………………………………………………

எங்கள் கிராமத்தின் முகவரிக்கு ஒரு தபாற்தலை………………….

hhhhhhhhhhhhhhhhhh

நீர்வேலிக் கிராமத்தவரது கல்விப் புலத்தின் திசைகாட்டியாகத் திகழ்ந்த பெருந்தகைக்கு தபால் தலை வெளியிடுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. மேலைப் புலத்தவரது மதமாற்ற முயற்சிகள், கலாசாரத் திணிப்புக்களிடையே சுதேசிகள் மொழியையும் சமயத்தை காப்பதற்கெனப் பள்ளிகளை நிறுவினர். அந்த வரிசையில் உதயமானதே அத்தியார் நிறுவிய பாடசாலையாகும். இன்று இப்பாடசாலைக் கல்வியை வழங்கும் கவின்கலைக் கூடமாகத் திகழ்கின்றது. நீர்வேலி மக்கள் மாத்திரமல்லாது வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தவர்களும் விரும்பி வநது கல்வி கற்கும் நிறுவனமாக இக்கல்லூரி திகழ்கின்றது. இத்தகைய சிறப்புக்களை இன்று இக்கல்லூரி பெறுவதற்கு ஏணிப்படிகளாகப் பலர் உழைத்திருக்கின்றார்கள். அமரர் அத்தியார் அருணாசலம் கண்ட கனவை மெய்ப்பிப்பதில் பலருடைய உழைப்புச் சங்கமித்திருக்கின்றது. நீர்வேலிக் கிராமத்தின் முகவரியாகக் கொள்ளத்தக்க அத்தியார் அருணாசலத்தின் புகழ் வானுயரப் பரவ வாழ்த்துக்கள்.
ச.லலீசன்
(நீர்வைக்கிழார்)

………………………………………………………………………………………………………………………………….

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய அதிபரின் வாழ்த்துச்செய்தி……………

vakee

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியானது நீர்வேலியில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கெல்லாம் தாய்ப்பாடசாலையாகும்.இப்பாடசாலை தொடர்பாக நடைபெறுகின்ற என்னநிகழ்வாகினும் அது எமது பாடசாலைக்கும் பெருமையாகும்.அந்தவகையில் கனடா வாழ் அத்தியார் இந்துவின் மைந்தர்கள் முதலியார் அத்தியார் அருணாசலத்திற்கு தபால்த்தலை வெளியிடுவது மகிழ்வான விடயமாகும்.இவ்வழா இனிதே நடைபெற எமது பாடசாலை சார்பாக வாழ்த்துகிறோம்.

அதிபர்-கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

 

……………………………………………………………………………………………………………………………

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை அதிபரின் வாழ்த்துச்செய்தி………………….

IMG_6769

நீர்வேலி மக்களின் கல்விப்பசிக்கு விருந்தளிக்கும் அருங்கூடமாக விளங்கிவரும் அத்தியார் இந்துக்கல்லூரியை ஸ்தாபித்த அமரர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களின் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிட்டு வைப்பதானது பாராட்டுக்குரியது.அவர் ஸ்தாபித்த பாடசாலையில் கல்வி கற்று தேர்ந்து கனடாவில் வாழும் பழைய மாணவர்களின் இந்த நன்முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் தாம் கற்ற பாடசாலையின் ஸ்தாபகருக்கு வெளிநாடு ஒன்றில் முத்திரை வெளியிடுவது சாதாரண விடயமல்ல.தாம் கற்ற பாடசாலையையும் அதனை ஸ்தாபித்தவரையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்தி இவ்வாறான நன்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுவதோடு முத்திரை வெளியீடு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிபர்

றோ.க.த.க பாடசாலை

நீர்வேலி வடக்கு 

…………………………………………………………………………………………………………………………….

thiruvasakam

0 Comments

Leave A Reply