10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]தமிழர் விடுதலைக் கூட்ணியின் புதிய தலைவர்![:]

[:ta]பொன் சிவசுப்பிரமணியம் தமிழர் விடுதலைக் கூட்ணியின் புதிய தலைவர்!

தமிழர் விடுதலைக் கூட்டணி இறுதியாக ஒரு புதிய தலைவரைக் கண்டெடுத்து உள்ளது. தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் பொன் சிவசுப்பிரமணியம் நேற்று (ஓகஸ்ட் 06) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

பொன் சிவசுப்பிரமணியம் குடும்பத்தினர் தமிழரசுக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்கள். பொன் சிவசுப்பிரமணியம் எழுபதுக்களின் நடுப்பகுதியில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த போதும் தமிழரசுக் கட்சியின் தேசியவாதிய அரசியலுடன் தன்னைத் தொடர்ந்தும் இணைத்துக்கொண்டிருந்தார். பிரித்தானியாவில் தமிழரசுக் கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளைகளை உருவாக்குவதிலும் அவற்றை இயக்குவதிலும் முன்நின்றவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆசிர்வதிக்கப்பட்டு அதன் தலைமைக் கட்சியாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி புத்துணர்வு பெற ஆரம்பித்தது முதல் தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கைத் தமிழ் அரசியலில் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இரா சம்பந்தன் – மாவை சேனாதிராஜா கூட்டுக்கும் வி ஆனந்தசங்கரிக்கும் இடையேயான போட்டியும் தனிநபர் முரண்பாடுகளும் தமிழரசுக் கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையேயான முரண்பாடாகியது.

இக்காலகட்டங்களில் பொன் சிவசுப்பிரமணியம் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்ட போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி உடனும் நட்புறவைப் பேணியவர். தமிழர் விடுதலைக் கூட்டணி புதிய தலைவரைத் தேடி அமிர்தலிங்கம் புதல்வர்கள் அனந்தி சசிதரன் சி வி விக்கினேஸ்வரன் என்று அலைந்த போது இறுதியில் தங்கள் தலைமைப் பொறுப்பை தமிழரசுக் கட்சிக்குள்ளேயே தேடி எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

லண்டனில் இருந்து தாயகத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புதிய தலைவரை பொதுக்குழு ஏற்றுக் கொண்டு ஜனநாயகத் தலைமையாக கொண்டு வரப்பட்டதில் முதல் அடியை பொன் சிவசுப்பிரமணியம் மிக நிதானமாகப் பதித்து உள்ளார்.

தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமுமான பொன் சிவசுப்பிரமணியம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்குவது தமிழரசுக் கட்சிக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போன்ற நிலைதான். தமிழர் விடுதலைக் கூட்டணி எங்கு இருந்து ஆரம்பித்ததோ இறுதியில் அதனுடனேயே கரைந்து போவதற்கான முதல் அடியையும் எடுத்து வைக்கின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டு செயலிழந்து மெதுவான மரணத்தை நோக்கிச் செல்வதைக் காட்டிலும் தமிழரசுக் கட்சியுள் கரைந்து கொள்வதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் தங்கள் முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரேவழி. பொன் சிவசுப்பிரமணியம் இன்று முதல் அவர்களைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை சுமந்துள்ளார்.

எஸ் வி செல்வநாயகம் அ அமிர்தலிங்கம் வி ஆனந்தசங்கரி வரிசையில் பொன் சிவசுப்பிரமணியம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று வரலாற்றில் ஒரு இடம்பெற்றுள்ளார் என்றால் அது மிகையல்ல.

கட்டுரைகள் | AUGUST 7, 2017 | http://thesamnet.co.uk/?p=86542

 

நன்றி ்

நடராசா திலீபன்[:]

0 Comments

Leave A Reply