10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தமிழ் இலங்கையருக்கான அரச விருது” வழங்கும் விழாவில்

 

இன்று பிற்பகல் (02.09.2019) கொழும்பு தாமரைத்தடாக (நெலும் பொக்குன) மண்டபத்தில் தேசிய நிகழ்வாக இடம்பெற்ற “தமிழ் இலங்கையருக்கான அரச விருது” வழங்கும் விழாவில் தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் மற்றும் இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களால் தியாகராஜகுருக்களின் புத்திரர் மயூரகிரிசர்மா அவர்களுக்கு   “கலை இளவரசன்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பல்வேறு வயதுப்பிரிவுகளைச்சேர்ந்த பல்வகை கலைத்தொடர்புடைய 222 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பெற்றனர். இவ்வாறு தேசிய நிகழ்வு என்று நடாத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

அதில் 30 வயதுக்கு உட்பட்ட  30 இளங்கலைஞர்களுக்கு கலை இளவரசன்/ கலை இளவரசி விருது வழங்கப் பெற்றது.உலகப்புகழ் பெற்ற ஏராளமான கலைஞர்களும் இந்நிகழ்வில் மேற்படி கௌரவங்களைப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மயூரகிரிசர்மா அவர்களுக்கு எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

[:]

0 Comments