10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு

ஸ்ரீல ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் ஞர்பகார்த்த நூல் நிலையத்தினரால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு நிகழ்வும் புதிய மின் இணைப்பு ஆரம்பித்து வைத்தல் நிகழ்வும் எதிர்வரும் 26.12.2016 திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக வடமகாண சபை உறுப்பினர் திரு.அ.பரஞ்சோதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலி கிழக்கு பிரதேச சபை செயலர் திரு.ஜெலீபன் அவர்களும் இலங்கை தமிழரசுக்கட்சி நிர்வாகச் செயலர் திரு குலநாயகம் அவர்களும் வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்க  முகாமையாளர் திரு.க.சிவலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். மேற்படி நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

0 Comments