10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தாயகம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தும் நிகழ்வு

புலம் பெயர்ந்தாலும் நிலத்தை மறக்காத நீர்வை மக்களைக் காணும் போது உள்ளம் சிலிர்க்கின்றது. வாழையடி வாழை என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து தமது சந்ததியினருக்குத் தாயகம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தும் நிகழ்வாகவே இதனைக் காண்கின்றேன்.நீர்வைமக்களின் ஒன்று கூடல், தாயக உறவுகளுக்கான உதவி வழங்கல் என இதில் பல அம்சங்கள் அடங்கியிருந்தாலும் எதிர்காலத்திலும் எமக்கும் புலத்திற்குமான உறவு தொடரவேண்டும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலேசியாவிற்கு வேலை நிமித்தம் சென்றவர்களில் சிலர் அங்கேயே வாழத்தலைப்பட்டனர். ஆனால் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தாயகத்திற்குமான உறவுப் பிணைப்பு வலுவாண்மை மிக்கதாக இருப்பதாகத் தெரியவில்லை.

நீர்வை மண்ணுக்குப் புகழ் சேர்த்த பெருமக்களை நினைக்கும் வகையில் வாழையடி வாழை அரங்கத்திற்குப் பெயர் சூட்டுவதும் மகிழ்ச்சிக்குரியது. வாழையடி வாழையின் நீட்சி நிலத்தில் இடம்பெறுவதும் இறுக்கமான தொடர்புகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். இன்று இடம்பெறும் விழாச் சிறப்படைய எனது நல்வாழ்த்துக்கள்.
நீர்வைக்கிழார் ச.லலீசன்

0 Comments