10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

திராவிட மரபுச் சிற்பச் சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா

நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம சுவாமி தேவஸ்தானத்திற்கெனப் புதிதாக அமைக்கப்பட்ட திராவிட மரபுச் சிற்பச் சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 27.06.2015 சனிக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. வெள்ளோட்ட நிகழ்வைத் தொடர்ந்து தேரை வடிவமைத்த சிற்பி கலாபூஷணம் விஸ்வலிங்கம் ஸ்தபதி குழுவினர் கௌரவிக்கப்படவுள்ளனர். நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.தியாகராஜக் குருக்கள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் சிவத்தமிழ்ச்சொல்லழகர் ச.லலீசன் ஆகியோரது ஆசியுரைகளும் வாழ்த்துரைகளும் இடம்பெறவுள்ளன.

Ther

0 Comments

Leave A Reply