10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]திருத்தப்படாதிருக்கும் கரந்தன்சந்தி ஊரெழு இணைப்பு வீதி.[:]

[:ta]

நீர்வேலி கரந்தன் சந்தியிலிருந்து ஊரெழு செல்லும் வீதி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் திருத்தப்படாததால் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.குறித்த வீதியினூடாக தினமும் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல நூற்றுக்ணக்கானோர் போக்குவரத்துச் செய்யும் நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பலாலி வீதியையும், இராச வீதியையும் இணைக்கும் முக்கிய கிளை விதியாகும். இதன் காரணமாக ஊரெழு, நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய்,புன்னாலைக் கட்டுவன் எனப் பல இடங்களிருந்தும் இந்த வீதியால் நூற்றுக் கணக்கான மக்கள் தினம் தோறும் பயணம் செய்கின்றனர். சுன்னாகம், மருதனார்மடம் சந்தை மற்றும் நீர்வேலி வாழைக் குலைச் சந்தைக்குச் செல்லும் விவசாயிகளும் வீதி திருத்தப்படாத காரணத்தால் தங்கள் உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

இது தொடர்பாகப் பல தடவைகள் பிரதேச செயலகம், வலி.கிழக்குப் பிரதேச சபை ஆகியவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதும் வீதியை முழுவதுமாகப் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

எனவே, குறித்த வீதியின் முக்கியத்துவம் கருதி வீதியை புனரமைப்புச் செய்ய உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதிப் பொதுமக்களும், போக்குவரத்துச் செய்வோரும் கோரிக்கை விடுக்கின்றனர். #யாழ்_தினக்குரல்..

[:]

0 Comments