10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

தேசிய அருங்கலைகள் பேரவையினால் தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நீர்வேலி காமாட்சி அம்பாள் கோவிலின் முன்பாக உள்ள மண்டபத்தில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 1 ஆம் திகதி மேற்படி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் த.பரராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப  நிகழ்வில் ஈ.பி.டி.பி.கோப்பாய் பிரதேசப் பொறுப்பாளர் ஐங்கரன் பிரதம விருந்தினராக கலந்து  கொண் டார்.
தேசிய அருங்கலைகள் பேரவையின் யாழ். மாவட்ட உதவித்திட்டப்பணிப்பாளர் எஸ்.நவதர் சன் மேற்படி பேரவையின் திட்டஆலோசகர் திரு மதி.த.இருதயராணி, கைத்தொழில் அபிவிருத்தி உதவியாளர் எஸ்.சசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சுமார் இருபது பயிற் சியாளர்கள் பங்குபற்றும் இப்பயிற்சி நெறியை திருமதி.எஸ்.தயாமதி ஆசிரியை நெறிப்படுத்தி நடாத்தி வருகின்றார்.
(நன்றி -நீர்வேலி வடக்கு செய்தியாளர். நீருஜன் செல்வநாயகம்.)

0 Comments

Leave A Reply