10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தேரினில் வலம்வந்து எம்பெருமான் பாரினில் நிலைபெறவே- சிறப்புப்பக்கம்

IMG_1172ஏரால் மேவும் யாழ்மண்ணில் நீரால் மேவும் நீர்வையெனும் ஊராம் நடுவன் எழுந்தருளும் ராஜசிம்ம கணபதியாம் பேரால் மேவும் பெருங்கருணை பேறை நமக்கு தினம் அருளி தேராம் என்னும் உற்சவத்தில் பவனி வருவார் பல்லாண்டே . .பிரபுத்துவமாம் மரபதிலே பாண்டி மழவன் வழித்தோன்றி பரபத்தினியார் பதம் போற்றும் அரசகேசரி வேந்தனவர் சிரமேற் கொண்ட பணியதுவாம் ஆலயம் தன்னை அமைத்ததனால் வரங்கள் பெறவே கோயிலமர்ந்த வாழிய அவர் புகழ் பல்லாண்டே . ஆவணிசதுர்த்தி நன்னாளில் அற்புதமாக கொடி ஏற்றம் பூவணி கோலத்தில் உவப்புடனே வீதியில் நீரே உலவிடுவீர் கோவணி நித்திலம் நீ சூடி நித்தமும் கருணை மழைபொழிவாய் காவணி வனப்புறு நீர்வையிலே கணபதி வாழிய பல்லாண்டே வாழைகள் தெங்கு மாஞ்சோலை மேவிடும் நீர்வை பதியினிலே நூலைப் படித்த புலவர் தந்த அரசகேசரிப்பிள்ளையாரோ காளைப்பரி சேர் தேரினில் வரும் செம்பாட்டுக்கு அதிபதியே ஏழை கண்ணீர் நீ துடைத்து எழிலாய் வாழ்வீர் பல்லாண்டே மாங்கனிக்காக பெற்றோரை வலம் வந்து வணங்கிய நாதா நீ ஓங்கிய அங்குச பாசம் அதால் அசுரர் குலமதை வேரறுத்தாய் பாங்கியர் சித்தி புத்தியெனும் பாவையர் இருவரின் பதியானாய் பாங்குடன் தேரினில் வலம்வந்து பாரினில் நிலைபெறவே பல்லாண்டே.

நீர்வேலி சரித்திரப்பிரசித்தி பெற்ற அரசகேசரிப்பெருமானின் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது.பிள்ளையாரின் பெரும் கருணைதரும் விழா இதுவாகும்.ஆன்மாக்களின் ஆணவத்தை அழித்து அருள் தரும் திருநாளாகும்.இந்நாளில் எம்பெருமானின் தேர்வடம் பிடித்து இழுத்தோமானால் குறைந்து திரவருள் கிடைக்கும்.எல்லோரும் எம்பெருமானை வழிபட்டு உய்வோமாக.

சர்வே ஜனகா சுகிநோபவந்து”

பிரம்மஸ்ரீ சோமதேவக்குருக்கள்

பிரதமகுரு

அரசகேசரிப்பிள்ளையார் கோவில்

………………………………………………………………………………………………………………………………………

maniவாழ்த்துச்செய்தி

இளம்பருவத்திலேயே தெய்வ உணர்வை ஊட்டி மக்களை மக்கட்பண்போடு வளர்ப்பன ஆலயங்களாகும். இந்த வகையில் சேது பரம்பரையில் ஆரியச்சக்கரவர்த்திகளான மறையோர்களாம் யாழ்ப்பாணத்தரசர்களின் வழிபாட்டுக்குரிய திருத்தலமாக விளங்கிய சிறப்புக்குரியது நீர்வேலி அரசகேசரித்திருத்தலம்.மூர்த்தி தலம்தீர்த்தம் என்ற முச்சிறப்பும் மிகவுடையதாய் அமைந்திருக்கிற இத்திருத்தலத்தே அப்பன் அம்மையுடன் அழகுப்பிள்ளையாக அரசகேசரியான் எழுந்தருளியிருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.இத்தல மேன்மைகளைப் பறைசாற்றுவதாக வெளிவரும் சிறப்பு மலர் ஒரு வரலாற்று ஆவணமாகவும் பதிவேடாகவும் அமைய வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். இத்தகைய அரிய கைங்கரியத்தை நிறைவேற்றிய அனைத்து நல்லுள்ளங்களையும் மனமார வாழ்த்துகின்றேன்.

‘நீர்வைமணி’ சிவஸ்ரீ. கு.தியாகராஜக்குருக்கள்

………………………………………………………………………………………………………………………………………………….

nnnநீர்வையம்பதியில் அமைந்திருந்து  எல்லோருக்கும் அருளை வாரி அள்ளி வழங்கிவரும் அரசகேசரிப்பெருமானின் தேர்த்திருவிழா நன்நாளில் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்று விநாயகப்பெருமானை பிரார்த்திக்கின்றேன்.

                                                                                சுபம்

பிரம்மஸ்ரீ  இராஜேந்திர சுவாமிநாதக்குருக்கள்

கந்தசுவாமி கோவில்

நீர்வேலி

………………………………………………………………………………………………………………………………………………….

myurபிரார்த்தனை உரை

எங்கள் பண்பாட்டின் உயிர்ப்பு மையங்களாக ஆலயங்கள் திகழ்கின்றன. தனி மனித நிலையிலும் சமூக அசைவியக்கத்திலும் ஆலய வழிபாடும் அதன் வழியான சமூக ஒருமைப்பர்டும் பெருந்துணையாகின்றன.இந்த வகையில் வரலாற்றுச் சிறப்பும்பண்பாட்டுச் செழுமையும் நிறைந்த நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாருக்கு இன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுவது சிறப்பிற்குரியதாகும்.அதே வேளை எம்பெருமானின் பெருமைகளைத் தாங்கிய ‘அரசகேசரியான் அமுதம்’ என்ற திருமலரும் வெளிவருவது நெஞ்சுக்கு நிறைந்த அமைதியைத் தருகின்றது.சூழுகின்ற விக்கினங்களை விலக்கி எங்கள் பண்பாட்டின் மேன்மைகளைக் காக்கும் ஞானத்தையும் செயல் வீரத்தையும்எல்லோருக்கும் அருளும் வண்ணம் எங்கள் அரசகேசரிப் பெருமானின் திருவடிகளை இறைஞ்சுவோமாக.

பிரம்மஸ்ரீ. தி.மயூரகிரி சர்மா
நீர்வேலி

0 Comments

Leave A Reply