10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

தேரேறும் கந்தனே போற்றி

kannan-kanthan1ஈழத்திருநாட்டின் இருதயமாக விளங்குவது யாழ்ப்பாணம். இப்புண்ணியபூண்ணிய பூமியில் இற்றைக்கு இருநூற்றி ஜம்பது ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அற்புதமான திருக்கோவில் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி கோயில். தமிழர்பண்பாட்டில் முருகவழிபாடு என்பது தனித்துவமானது. மிக நீண்ட வரலாறு கொண்டது. பழம் பெரும் கிராமமாகிய நீர்வேலிக்கிராமம் முற்றுமுழுதாக முருகவழிபாட்டுக்கு முதன்மை கொடுத்த கிராமம். இக்கிராமத்தில் சைவசமயத்தவரைத் தவிர்ந்த பிற மதத்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை பாரம்பரியமாகக் காணப்பட்டது.எமதூரின் சிறப்பையும் வனப்பையும் அதிகரிக்கும் அழகை கொண்டுள்ள நீர்வைக்கந்தன் நீர்வேலியின் பிரதான நுழைவாயிலாக அமைந்துள்ளான்.எல்லோர் மனங்களிலும் ஆழமாக அமர்ந்து அவர்களுக்கு அருளாட்சி செய்து வரும் எம்பெருமானுக்கு தேர்த்திருவிழா.இந்நன்நாளில் நீர்வைக்கந்தனை வணங்கி எல்லா மக்களும் எல்லா நலனும் பெறவேண்டும் என்றும் ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து வடம்பிடிப்போமாக.

                                                                                                  — நீர்வேலி இணையம்

1 Comment

  1. our best wishes for the ther festival!!!

Leave A Reply