10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நடைபெற்று முடிந்த இலண்டன் கலைமாலை நிகழ்வில் எமது இணையத்தினை பாராட்டி விருது வழங்கப்பட்டது

Trophy Winnerநேற்று (18.10.2014 )நடைபெற்று முடிந்த 12 ஆவது கலைமாலை நிகழ்வானது நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரால் மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இது போலவே மேற்படி நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. கலைமாலை நிகழ்வில் கிடைக்கின்ற மேலதிக நிதியில் நிர்வேலியில் மகப்பெரிய கல்விசார் வேலைத்திட்டங்களை செய்துவருகிறது. இந்தவருட கலைமாலை நிகழ்வில் எமது இணையம் இலவசமாக நேரலை சேவையினை வழங்கியிருந்தது.இதனால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நீர்வேலி மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலைமாலை நிகழ்வினை நேரலையில் கண்டுமகிழ்ந்தனர். இதற்காக இலண்டனில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிய செல்வன் சுரேந்திரா சாயி அவர்களுக்கு எமது இணையம் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறது.மேலும் எமது இணையத்தினை பாராட்டி கலைமாலை நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 01.12.2014 அன்று இணையம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இலண்டன் நலன்புரிச்சங்கம் இவ்விருதினை வழங்கியிருப்பது மிகவும் மிகிழ்வினையும் ஊக்கத்தினையும் தருகிறது. இலண்டன் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகசபையினருக்கு எமது உளங்கனிந்த நன்றிகளை இணையம் தெரிவித்துக்கொள்கிறது.

0 Comments

Leave A Reply