10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நண்பர்களே உயிரை மாய்த்துவிட்டால்…..[:]

[:ta]

வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள், தோல்விகள், மிரட்டல்கள் ஆகியவை மன அழுத்தங்களாகி விரத்தியின் உச்சத்திற்கே சென்று, தங்களைத்தாங்களே மாய்த்துக்கொள்ள முடிவுசெய்து, தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். நண்பர்களே ஒன்றை மனத்தில் கொள்ளுங்கள், எப்படி நீங்கள் பிறந்ததை, நீங்கள் முடிவு செய்யவில்லையோ அதுபோலத்தான் உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இல்லை. இப்படி நான் பதிவிடும் போது பொத்தாம்பொதுவாக கருத்து சொல்வது எளிது என்று எல்லோருக்கும் எண்ணத்தோன்றும்.


நீங்கள் தற்கொலை முயற்சியினை எடுப்பதற்கு முன் ஒரு நொடி உங்களைப்பற்றி யோசித்தீர்களேயானால் இப்படிப்பட்ட கோழைத்தனத்தை நீங்களே விட்டு விடுவீர்கள். இந்த சமூகமே போட்டி பொறாமை எல்லாம் நிறைந்தது தான். நாம் வெற்றி பெறுவதற்கு நம் கல்வி மட்டுமே காரணம் அல்ல. நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு அல்லது தனியார் நிறுவன பணிதான் முக்கியம் என்பது இல்லை. நாம் படிக்க நினைக்கிற படிப்பு நம் உயிரை மாய்க்கும் நிலைக்கு கொண்டு செல்லுமானால் அந்த படிப்பை உதறித்தள்ளுவத்தில் தவறில்லை. வாழ்க்கையில் முன்னேறிய பலரையும் கவனியுங்கள் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். மனதில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்கிற வைராக்கியம் இருந்தால் போதும். கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் சாதாரண வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். எந்த ஒரு செயலுக்கும் தீர்வு உண்டு என்பதை மனதில் நினைவு கொள்ளுங்கள்.
நண்பர்களே உயிரை மாய்த்துவிட்டால் நீங்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிடுவீர்களா? அதற்கு பதிலாக உங்கள் தோல்வியை நீங்களே ஒப்புக்கொண்டது போலல்லவா ஆகிவிடும்! எந்த சமூகத்தை பார்த்து பயந்து, வெட்கித்து, கோழைத்தனமாக தற்கொலை செய்ய நினைக்கிறோமோ! அந்த சமூகமே உங்களைப்பார்த்து ஏளனம் செய்யாதா? உங்களை மட்டுமா பாதிக்கும்? உங்கள் பெற்றோர்கள், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சகோதரசகோதரிகள், நெருங்கிய உறவினர்கள் உங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று அனைவரையும் அல்லவா பாதிக்கும்.
வாழ்க்கையில் வெற்றியே பார்க்காத எத்தனையோ பேர் இன்னும் வெற்றிபெற போராடுவதை போல நீங்களும் போராட முயற்சி செய்யுங்கள்.

நண்பர்களே இன்றய தோல்வி நாளைய வெற்றியின் படிக்கட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி.santhini

 

[:]

0 Comments

Leave A Reply