நறுவைத்தாழ் குளம் திருத்தப்பட்டு வருகிறது
போரின் போது மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட இந்த நறுவைத்தாழ் குளமானது உலகவங்கியின் 1.1 மில்லியன் நிதியுதவியுடன் நீர்வேலி தெற்கு விவசாய சம்மேளனத்தினால் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 1975 ம் ஆண்டுக்கு முன்னர் நீர்வேலிக் கந்தசுவாமி கோவில் இக்குளத்தில்தான் தீர்த்தம் ஆடியது.கோவிலுக்கென தீர்த்தக்கேணி வெட்டப்பட்ட பின்னர் நீர்வைக்கந்தன் இங்கு தீர்த்தம் ஆடுவது நிறுத்தப்பட்டது.அதன் பிறபட்ட காலங்களில் வயலுக்குச்செல்லும் மாடுகள் நீர் அருந்துவதும் ஊர் இளைஞர்கள் நீந்தியும் வந்தனர்.இதன் பிற்பாடுகளில் அந்தியேட்டிக்கிரிகைகள் இதனில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.1995 ஆம் ஆண்டு போர் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இன்று வரை மிதிவெடிகளும் கண்ணிவெடிகளும் புதைக்கப்பட்டு இருந்தன.அதனால் எவரும் இப்பகுதிக்குள் செல்வதில்லை.நறுவைத்தாழ் குளத்திற்கு தற்போது தான் மீட்சி வந்துள்ளது.
0 Comments