10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நலன்புரிச்சங்கங்கள்

 இன்னறும்      கனிச்    சோலைகள்     செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன     சத்திரம்    ஆயிரம்    வைத்தல்
ஆலயம்   பதினாயிரம்   நாட்டல்
பின்னருள்ள    தருமங்கள்   யாவும்
பெயர்   விளங்கி   ஒளிர   நிறுத்தல்
அன்ன    யாவினும்    புண்ணியம்    கோடி
ஆங்கு   ஒர்   ஏழைக்கு   எழுத்தறிவித்தல் 

என்ற பாரதியின் பாவுக்கு அமைய அறங்கள் யாவற்றுள்ளும் உயர் தகமையுடையது ஏழைக்கு எழுத்தறிவித்தலாகும். அரசியல், பொருளாதார,சமயகலாசார அம்சங்கள் யாவும் கல்வியிடாகவே வளர்த்தெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் கல்விச் செல்வமே அனைத்து செல்வங்களிலும் மேன்மையுடையது. எனவே கல்வியை வளர்ப்பது எம் எல்லோரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

நோக்கம்
மேற்குறிப்பிட்ட உயர் தகைமை கொண்ட கல்வியைப் போதிக்கும் பாடசாலைகள் நீர்வேலிக் கிராமத்தில் ஐந்து உள்ளன. அத்தியாயர் இந்துக் கல்லூரி நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழக் கலவன் பாடசாலை கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம் நீர்வேலி சீ.சீ. தமிழக் கலவன் பாடசாலை நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலை ஆகிய ஐந்து அரச கல்விச் சாலைகளிலும் 1470 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். இப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக புலம் பெயர் நாடுகளில் வாழும் நீர்வேலி மக்கள் பல உதவிகளை வழங்கி வருகின்றனர். தனிபட்ட வகையிலும் நலன்புரி அமைப்புக்கள் மூலமும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவரினும் நலன்புரி அமைப்புக்கள் வழங்கி வரும் உதவிகளை வெளிப்படுத்துவதே  நோக்கமாகும்.

நீர்வேலி நலன்புரி சங்கம் – Canada நீர்வேலி நலன்புரி சங்கம் – U.K(நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரி- பழைய மாணவர் நலன் விரும்பிகள் சங்கம் – U.K . உட்பட) நீர்வேலி நலன்புரி சங்கம் – Swiss ஆகிய அமைப்புக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக நீர்வேலி கிராமப் பாடசாலைகளுக்கு ஆற்றி வருகிறது.