10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீ.நலன்புரி.ச.சுவிஸ்

நீர்வேலி-நலன்புரி-சங்கம் Swiss

இளைஞர்கள் பலரை உள்ளடக்கி துடிப்புடன் செயற்பட்டு வரும் இச் சங்கம் கல்வி அபிவிருத்தியை மட்டுமே தன் தாரக மந்திரமாகக் கொண்டது. நீர்வேலி பாடசாலைகள் ஐந்துக்கும் இச் சங்கம் உதவி வருகின்றது.நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான வாகனத் தரிப்பிடங்கள் கல்லூரிக்குத் தெற்குப் பக்கமாக ஆறு பரப்பு காணி கொள்வனவு ,கல்லூரிப் பெயர் வளைவு ,கணணிக் கல்விக்கான வகுப்பறை மற்றும் தற்போதுள்ள அதிபர் அலுவலகம் என்பன புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தியதுடன் இவற்றிற்கான தளபாடங்கள், மின் இனணப்புக்கள்,கணணி வகுப்பறைக்கான குளிர்சாதனம் (Aircondition) என்பன நீர்வேலி நலன்புரிச் சங்கம் – சுவிஸ் அமைப்பின் நிதி அன்பளிப்புடன் உருவாக்கப்பட்டவையாகும்.மேலும் ஆரம்பக் கல்வி வகுப்பறையொன்றும் இச் சங்கத்தினால் புனரமைப்புச்செய்யப்பட்டது. கல்லூரியின் ஒலிபெருக்கித் தொகுதி இச் சங்கத்தினாலேயே வழங்கப்பட்டது. மாணவர்களின் சதுரங்கப் பயிற்சிக்கான உபகரணங்களுக்கும் இச்சங்கம் நிதி அன்பளிப்புச் செய்துள்ளது.

IMG_0235

கல்விஅபிவிருத்தியில் கணணிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் பத்துக்கும் மேற்பட்ட கணணிகளை இச் சங்கம் அத்தியார் இந்துக் கல்லூரிக்கு வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஊட்டும் வகையில் பரிசளிப்பு நிதிக்கும் அன்பளிப்புச் செய்துள்ளது. மேலும் 2004 ஆம் ஆண்டு கல்லூரி பவள விழாவினைக் கொண்டாடிய போது பவளவிழா மலர் சுவிஸ் அமைப்பின் நிதி அன்பளிப்புடனேயே வெளியிடப்பட்டது.

நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழக் கலவன் பாடசாலையின் காணிக் கொள்வனவு பரிசளிப்பு விழா நிதியம்,நூலகத் தளபாடங்கள்,நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள், நவீன கற்பித்தல் உபகரணமான மேல் தலை எறியி
(O.H.P) என்பவற்றுக்கான நிதி அன்பளிப்புக்கள் நீர்வேலி நலன்புரிச் சங்கம் – சுவிஸ் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயத்துக்கென இச் சங்கம் தற்காலிக நூலகம் ஒன்றுக்கான உதவிகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் நூலக தளபாடங்கள், ஒரு தொகுதி நூல்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டடுள்ளன.

நீர்வேலி சீ.சீ. தமிழக் கலவன் பாடசாலைக்கு Áலக தளபாடங்கள், நூல்கள் என்பவற்றை வழங்கி மாணவர் மத்தியில் மாணவர் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் இப் பாடசாலைக்கு நவீன கற்பித்தல் சாதனமான மேல் தலை எறியி (O.H.P),கணணி தொகுதி ஒன்று என்பனவற்றையும் சுவிஸ் அமைப்பு அன்பளிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலையின் கலவி அபிவிருத்திக்காக நூலக தளபாடங்கள், நூல்கள் என்பனவற்றை நீர்வேலி நலன்புரி சங்கம் – சுவிஸ் அமைப்பு வழங்கியுள்ளது.2007 ஆம் ஆண்டு நீர்வேலி பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களில் எழுத்தறிவு மட்டம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மொழித்திறன் வகுப்புக்கள் இச் சங்கத்தின் அனுசரனையுடன் நீர்வேலி சீ.சீ. பாடசாலையில் நடாத்தப்பட்டன. பாடசாலை அதிபர்காளால் நியமிக்கப்பட்ட இரண்டு அசிரியர்களுக்கும் இச் சங்கத்தினால் வேதனம் வழங்கப்பட்டு வகுப்புக்கள் இலவசமாக நடாத்தப்ட்டன.

மாணவர் மத்தியில் பொது அறிவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2005 ஆம் அண்டு முதல் இச் சங்கத்தினால் பொது அறிவுப் பரீட்சையொன்று இலவசமாக நடாத்தப்பட்டு உயர் புள்ளி பெறும் மூன்று மாணவர்களுக்குப் பணப் பரிசில்களும் சான்னிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. நீர்வேலியைச் சேர்ந்த சமூகசேவகியான வேதவல்லி ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக “ அமரர் வேதவல்லி கந்தையா பொது அறிவுப் போட்டி ” என்ற பெயரில் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் இப் பரீட்சைக்கு நீர்வேலி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளுடன் நீர்வேலி அணியத்தைச் சேர்ந்த அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், அச்செழு மெ.மி.த.க. பாடசாலை, சிறுபிட்டி அ.த.க. பாடசாலை,சிறுபிட்டி இ.த.க. பாடசாலை, ஆகிய நான்கு பாடசாலைகள் உட்பட ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இப் பரீட்சை இலவசமாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக புலமைப்பரிசில் திட்டத்தையும் சுவிஸ் அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது. நீர்வேலி அணியத்திலுள்ள மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த 70 மாணவர்களுக்கு இச் சங்கம் தற்போது நிதி அன்பளிப்பு செய்து வருகிறது.

நீர்வேலி பாடசாலைகளுக்கு உதவி வரும் சுவிஸ் அமைப்பு நீர்வை மண்ணில் பிறந்த இளைஞர்களின் கூட்டிணைவால் தன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த வகையில் நீர்வேலி நலன்புரிச் சங்கம் – சுவிஸ் அமைப்பின் இணைப்பாளர்களாகச் செயற்பட்டு வரும் திரு. கா.யுவநேசன்,திரு. கு.இந்திரகுமார்,திரு. ஆ.சிறீரங்கன் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பங்களிப்பின் பலாபலன்கள்

மேற்குறித்த புலம் பெயர் நலன்புரி அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளுரிலும் தனிப்பட்ட அன்பர்கள் வழங்கிய உதவிகள். அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மனித வளங்களின் அறிவுசார் செயற்பாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு நீர்வேலி பாடசாலைகளின் உயர்வுக்கு வழியமைத்து வருகின்றன. பௌதிக வளத்துறையில் மட்டுமன்றி கல்வி மற்றும் இணைக்கலைத் திட்டத்துறையில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.