10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீ.நலன்புரி.ச-கனடா

CommitteeMembers2013-2014-1CommitteeMembers2013-2014-2
………………………………………………………………………..
Neervely Welfare Board of directors 2012/2013

1

Neervely Welfare association – Canada Trustees & Advisory Committee 

mmm

நீர்வேலி நலன்புரி சங்கம் – Canada

இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் நீர்வேலி பாடசாலைகளின் உயர்வுக்கு கைகொடுத்து வருகின்றது. இலங்கையில் அடிக்கடி விதந்துரைக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்களில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் – கற்பித்தல் செயற்பாடு என்பது முனைப்புப் பெற்றது. இதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிலும் சிறுவர் பூங்கா சமூகத்தின் உதவியோடு அமைக்கப்பட வேண்டுமென விதந்துரைக்கப்பட்டது. இதனை கரிசனையொடு கருத்திலெடுத்த நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா அமைப்பு நீர்வேலியிலுள்ள ஐந்து பாடசாலைகளுக்கும் 2002 ம் ஆண்டில் சிறுவர் பூங்கா அமைக்க முன் வந்தமை குழந்தைச் செல்வங்களுக்கு அவர்கள் அளித்த மதல் பரிசாகும். அத்தியாயர் இந்துக் கல்லூரி கரந்தன் இராமப்பிள்ளை வித்தியாலயம் நீர்வேலி சீ.சீ. தமிழக் கலவன் பாடசாலை நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலை என்பவற்றுக்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு இன்றும் மாணவர் பாவனையில் இருந்து வருகிறது. மேலும் நீர்வேலி தெற்கு இ.த.க. பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலை வளவைச் சுற்றி இச் சங்கத்தின் நிதி அன்பளிப்போடு கொங்கிறீற் தூண்கள் நாட்டப்பட்டு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பொருத்தமான இடம் அப்போது இல்லாத காரணத்தினால் அப் பாடசாலைக்கு மாணவர் பயன்பாட்டுக்காகத் தளபாடங்களை இச் சங்கம் வழங்கியது.

IMG_0211

மேலும் சேதமடைந்த நிலையிலிருந்த நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலையின் கட்டிடங்கள் இச் சங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு மாணவர்களுக்கான கற்றல்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தியார் இந்துக் கல்லூரியில் 125அடி x 25அடி அளவு கொண்ட வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த கட்டிடம் 2010 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபா செலவில் இச் சங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வகுப்பறைகளாக்கப்பட்டு இன்று புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. மேலும் இக் கல்லூரியின் பிரதான வீதி மதில் திருத்தம், உள்ளக வீதி புனரமைப்புப10ம்பந்தல் திருத்தம் என்பவற்றுக்கும் இச் சங்கம் நிதி அன்பளிப்பு செய்துள்ளது. நீர்வேலி சு.ஊ பாடசாலை இட வசதி இன்மையால் பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய போது 2009ஆம் ஆண்டு அப் பாடசாலை புதிய காணியினை கொள்வனவு செய்ய இச் சங்கம் நிதி அன்பளிப்பு செய்துள்ளது. இதனால் அப் பாடசாலை காலை ஆராதனை உடற்பயிற்சி விளையாட்டுப் போட்டி ஆகிய நிகழ்வுகளை இலகுவாக நடாத்தக் கூடியதாகவுள்ளது. மாணவர்களின் உடல்உள ஆரோக்கியத்துக்கு இது மிகுந்த வரப்பிரசாதமாகும். நீர்வேலி சீ.சீ பாடசாலைக்குப் பொருத்தமான அதிபர் அலுவலகம் இல்லாதிருந்தமை அப் பாடசாலையின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெறும் இடையூறாக நீண்ட காலம் இருந்து வந்தது.

IMG_0210

2011ஆம் ஆண்டில் நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா அமைப்பினால் இப் பாடசாலைக்கு பொருத்தமான இடத்தில் அதிபர் அலுவலகம் புனரமைப்புச் செய்யப்பட்டு கவர்ச்சிகரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபர் அலுவலகத்துக்கான கணணி மற்றும் இயந்திர அச்சு என்பனவும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பல பௌதிகவள அபிவிருத்தித் திட்டங்களை இச் சங்கம் நீர்வேலி பாடசாலைகளுக்கு நிறைவேற்றியிருப்பதுடன் தொடர்ந்தும் உதவிக் கொண்டிருப்பது இப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கின்றது. கல்விச் செயற்பாடுகளில் நேரடித்தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் மாணவர்கள் என்பது நாமெல்லோரும் அறிந்த அம்சமாகும். இதை நன்குணர்ந்த நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா அமைப்பு நீர்வேலிப் பாடசாலைகளின் கல்வி மற்றும் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளுக்குப் பல உதவிகளை வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது. வறிய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்கள்பரிசளிப்பு விழாக்கள்விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் முதலான செயற்பாடுகளுக்கு இச் சங்கம் உதவி வருகின்றது. நீர்வேலிப் பாடசாலைகளில் கற்றலில்ஆர்வம் மிக்க மிக வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை 2009ஆம் ஆண்டு முதன் முதலாக சங்கத்தின் சார்பில் அப்போதைய சங்கத் தலைவர் அத்தியார் இந்துக் கல்லூரியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் பரிசளிப்பு விழாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பாடசாலைகளுக்கு இச் சங்கம் நிதி அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றது. இந்த வகையில் நீர்வேலியின் அனைத்துப் பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்களுக்கு இச் சங்கத்தினால் வருடந் தோறும் நிதி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் உடல்உள ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்குடன் பாடசாலைகளின் வருடாந்த மெய்வலுநர் போட்டி நிகழ்வுகளுக்கும் இச் சங்கம் உதவி வருகின்றது. ஆண்டு தோறும் நிதிக் கோரிக்கைகளை விடுவிக்கும் அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி R.C. பாடசாலை நீர்வேலி C,Cபாடசாலைநீர்வேலி தெற்கு இ.த.க. பாடசாலை என்பன இச் சங்கத்தின் நிதி அன்பளிப்புக்களைப் பெற்று வருகின்றன. மேலும் நீர்வேலி C.Cபாடசாலை நீர்வேலி தெற்கு இ.த.க. பாடசாலை என்பவற்றில் தரம் ஒன்று மாணவர்களின் சேர்வு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் குறித்த வகுப்பில் புதிதாக இணையும் மாணவர்களுக்கு இச் சங்கம் நிதி அன்பளிப்புக்களை வழங்கி வருவதும் பாராட்டுக்குரியது. இந்த வகையில் நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா அமைப்பு இக் கிராமப் பாடசாலைகளின் கல்வி மற்றும் பௌதிக வளவிருத்திக்கு கடந்த காலங்களில் வழங்கிய பங்களிப்புக்களை நன்றியுடன் நினைவு கூர்வதோடு கடந்த ஆண்டு தொடக்கம் நீர்வேலியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறும் மாணவர்களிடையே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கஸ்டத்தின் நிமித்தம் தமது உயர் கல்வியைத் தொடரமுடியாத நிலையிலுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் கல்விக்கான மாதாந்தச் செலவினை சங்கம் ஏற்று வழங்கி வருகிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் இரு மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா அமைப்பின் தலைமைப் பதவியை காலத்துக்கு காலம் பொறுப்பேற்று இச் சங்கத்தை வழி நடாத்தி வரும் திரு. S. சிவலிங்கம்,திரு S.பாலசிங்கம்,திரு P.பத்மநாதன் திரு S. பிறைசூடிதிரு S. K. பாலேஸ்,திரு N.ஞானேந்திரன்,திரு. ஜெயக்குமார் திருமதி து.வரதராஜன் திரு. ஜெகன் பசுபதி, திரு. ஜீவா கோபாலசிங்கம், மற்றும் செயலாளர்கள்,பொருளாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள், நிதி அன்பளிப்புச் செய்யும் அன்பர்கள் அனைவருக்கும் நீர்வேலி மக்கள் நன்றி கூறவேண்டும்.