10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீ.நலன்புரிச.லண்டன்

1

 

தலைவர் திரு.திருவாசகம் அவர்கள்

 

 

 

 

லண்டன் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்(03.02.2013)
4
(நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர்,நலன் விரும்பிகள் சங்கம் U.K)

கடல் கடந்த நாடுகளிலிருந்து நீர்வேலி கிராமப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்கு உதவி வரும் அமைப்புக்களுள் ஐக்கியராச்சியத்தில் இயங்கி வரும் மேற்குறித்த அமைப்புக்களும் முக்கியம் பெறுகின்றன. இவற்றுள் அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நலன் விரும்பிகள் சங்கம் குறித்த கல்லூரியின் உயர்வுக்காக 2004 ஆம் ஆண்டு உதயமாகியமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலி நலன்புரிச் சங்கம் – U.K. அமைப்பு அத்தியார் இந்துக் கல்லூரியின் பௌதிக வள விருத்திக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இக் கல்லூரிக்கான குடிதாங்கிகள் (2000 கலன்) குழாய் நீர் விநியோகம் விளையாட்டு மைதானத்துக்கான காணி (நெற்பரப்பு 9) மைதான ஓடு பாதைகள் புனரமைப்பு 2004 இல் கல்லூரிக் கட்டிடங்களுக்கான வெள்ளை அடித்தல் பிரதான மண்டபக் கூரை திருத்தம் பிரதான மண்டபத்துடன் இணைந்த மூன்று மண்டபங்கள் திருத்தம் 15 வகுப்பறை மறைப்புக்கள் நிக்கொட் கட்டிட குறைப்பு நிதி (ரூபா 15 இலட்சம்) பிரதான மண்டப மின் இணைப்புக்கள் ஆகிய வேலைத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளமை பாரட்டுக்குரியது.

நீர்வேலி தெற்கு இந்துத் தமிழக் கலவன் பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களை முழமையாகக் கொண்டு இச் சங்கத்தினால் அப் பாடசாலைக் கட்டிடங்கள் வர்ணம் பூசி புனரமைப்புச் செய்ததுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் சுவர் சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.

IMG_0260

அத்தியார் இந்துக் கல்லூரியின் கல்வி அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்கள் பலவற்றை பழைய மாணவர் நலன் விரும்பிகள் சங்கம் – U.K . அமைப்பு நிறைவேற்றி வருகிறது. நூலகத்துக்கான நூல்கள் அன்பளிப்பு மாணவர் வரவை ஊக்குவிக்கும் நோக்குடன் 2005 ,2006 ,2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் உச்ச வரவு கொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர் தொகையை அதிகரிக்கும் நோக்குடன் அத்தியார் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களளுக்கு ஆண்டு தோறும் பெருமளவு நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. புலமைப் பரசில் பரீட்சையில் சித்தியடைந்து அத்தியார் இந்துக் கல்Âரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இச் சங்கம் 2006 ஆம் அண்டு முதல் நிதி அன்பளிப்புக்களை வழங்கி வருகின்றது. காலத்துக் காலம் ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமித்து அவருக்கான மாதாந்த சம்பளத்தை இச் சங்கம் வழங்கி வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தின விழாவையும் பழைய மாணவர் சங்கம் – U.Kஅமைப்பு அத்தியார் இந்துக் கல்லூரியில் நடாத்தி வருகின்றது.

IMG_0261

நீர்வேலி நலன்புரிச் சங்கம் – U.K. அமைப்பு 2013 ஆம் ஆண்டு முதல் தனது வேலைத் திட்டங்களை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐக்கியராட்சியத்தில் இயங்கும் நலன்புரி அமைப்புக்கள் இரண்டிலும் உள்ள விசேட அம்சம் யாதெனில் இரண்டு அமைப்புக்களிலும் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகிய பதவிகளை ஒருவரே வகித்து வருகின்றனர். இந்த வகையில் தலைவர் திரு. ஆ.திருவாசகம் செயலாளர் திரு. ளு.செல்வநாதன் பொருளாளர் திரு. S.சுபேஸ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர்