10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நல்லதொரு ஆரம்பம் – நீர்வேலி பாலர் பகல் விடுதி

IMG_0984IMG_0968
கடந்தபல வருடங்களாக பாலர்பகல்விடுதி தனது வளர்ச்சிப்பாதையில் பின்னோக்கியே சென்று கொண்டிருந்தது.போதியளவு நிதியுதவிகளை வெளிநாட்டு புலம்பெயர் உறவுகள் செய்திருந்த போதும் கடந்தகாலங்களில் பாலர்நிலையம் மூடப்படும் தறுவாயிலேயே இயங்கிவந்துள்ளது.எமதூரின் பிள்ளைகள் யாழ்பாணத்திற்கும் கோப்பாய் உரும்பிராயிலும் Kids Park என பிள்ளைகளை அனுப்பி அதிகளவான பணத்தினையும் நேரத்தினையும் செலவுசெய்து வருகிறார்கள்.சகலவளங்களும் அதற்கான நதியுதவிகளும் போதுமான அளவு வெளிநாடுகளில் இருந்தும் உள்ளுரிலும் இருந்தும் கிடைக்கும் போது பாலர்பகல்விடுதியை பயனற்ற நிலையில் நோக்கி வேறிடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவது பொருத்தமற்றது.

IMG_0968

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி அதிபர் திரு செ.பத்மநாதன் அவர்களின் தலமையிலான நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பாலர்பகல்விடுதி தனது வளர்ச்சிப்பாதையில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தத நிலைக்கு சடுதியான நிறுத்தம் வழங்கி அதன்முன்னேற்றப்பாதைக்கு நல்லதொரு ஆரம்பம் வழங்கியிருந்தனர்.

IMG_0318

புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்களில் பெருமளவான வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.சிறுவர்களுக்கான சித்திரங்கள் பின்பக்க சுவர்கள் முழுவதும் வரைவிக்கப்பட்டுள்ளன.மழலைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் திருத்தியமைக்கப்பட்டும் வர்ணம் பூசப்பட்டும் உள்ளது.கூரைகள் ஆனைத்தும் மழைகாலங்களில் ஒழுக்கு விழாமல் சீர் செய்யப்பட்டுள்ளது.பீலிகள் யாவும் பொருத்தப்பட்டுள்ளன.இதனை விட மேலும் பலவேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

IMG_0962இம் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதிபர் பத்மநாதன் அவர்கள் பொருளாளர் பவானந்தன் அவர்கள் மற்றும் திருமதி யோகானந்தா இவர்களுடன் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.நிதியுதவிகளையும் ஊக்கங்களையும் அளித்துவரும் நீர்வேலியைச்சேர்ந்த புலம்பெயர் உறவுகள் அனைவரும் போற்றப்படவேண்டியவர்கள்.அனைவரும் இணைந்து இப்பாலர்நிலையத்தினை நல்லதொரு நிறுவனமாக மாற்றுவதற்கு உழைப்போமாக.இது நல்லதொரு ஆரம்பம்

IMG_0991IMG_0990IMG_0989IMG_0988IMG_0987IMG_0986IMG_0992IMG_0982IMG_0980IMG_0979IMG_0978IMG_0977IMG_0976IMG_0971IMG_0970IMG_0969IMG_0968IMG_0972IMG_0964IMG_0962IMG_0957IMG_0964

0 Comments

Leave A Reply