10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நல்லூர் பிரதேச சபையினால் கழிவு நீரினை நீர்வேலி தரவையினுள் கொட்டுதல்

கடந்த 17 .01. 2020 அன்று நல்லூர் பிரதேச சபையினால் கழிவு நீரினை கோப்பாய் நீர்வேலி தரவையினுள் கொட்டுவதற்கு வரும்போது நீர்வேலியைச் சேர்ந்த நண்பன் கிரி என்பவர் மக்கள் சேவகன் ஐங்கரன் இராமநாதன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு. இப் பிரதேச சபையின் கழிவு பவவுசரை கொட்ட விடாது மறித்து வைத்திருப்பதாகவும் கூறினர். இதேபோன்று அவர் பல தடவைகள் என்னிடம் தொலைபேசியில் அழைத்து அறிவித்திருந்த போதும். இன்று நேரில் பிடித்து இருப்பதாக கூறியதற்குகிணங்க நானும் கெளரவ உறுப்பினர் நாகமணி இராசநாயகமும் உடனடியாக அங்கு சென்றிருந்தோம். அங்கு சென்று ஊழியர்களிடம் யாரை கேட்டு இங்கு கொடுக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தபோது. அதற்கு அவர்கள் மேற்பார்வையாளர் தான் இங்கு கொட்டுமாறு கூறியதாக கூறினார்கள். அதற்கு பின் நாங்கள் நல்லூர் பிரதேச சபை மேற்பார்வையாளரையும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உப தவிசாளர் , ஆகியோரை அவ்விடத்திற்கு வருமாறு அழைத்து அவர்களுக்கு


இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்ற இணக்கப்பாட்டுடன் கொண்டு வந்த கழிவுநீரிணையும் திருப்பி அனுப்பி இருந்தோம். இதேபோன்று சாவகச்சேரி பிரதேசசபை வண்ணாத்தி பாலம் ஊடாக கொண்டு வந்து புத்தூர் பகுதி தரையில் கொட்டுவதாகவும் முன்னாள் கௌரவ தவிசாளர் அவர்கள் கூறியிருந்தார். எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது இருக்க நண்பன் கிரி போல உங்கள் பிரதேசத்தை பாதுகாத்துக் கொள்ள வலிகாமம் கிழக்கிலுள்ள மக்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இது தொடர்பாக இனிவரும் மாதாந்த சபை அமர்வில் கேள்வி எழுப்பவும் உள்ளேன்.

ஐங்கரன் இராமநாதன் முகநூலில் இருந்து………………..
 

0 Comments

Leave A Reply