newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]நாளை நீர்வேலியில் பரதநாட்டிய அரங்கேற்றம்[:]

[:ta]

நீர்வேலி தெற்கு நீர்வேலி வரதன் கடை உரிமையாளரான திரு.சிவனேஸ்வரன் அவர்களின் புதல்வியும் நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த நடன விரிவுரையாளர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் மாணவியுமான செல்வி கஜீபனா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.05 மணியளவில் திரு.லலீசன் தலைமையில் இராச வீதி நீர்வேலியில் உள்ள பொன் செல்வமகால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக வடக்கு மகாண சபையின் முதலமைச்சர் கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களும் வடமாகாண சபையின் கல்வியமைச்சர் திரு.க.சர்வேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் கோப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகன் அவர்களும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி திரு.சுதாகர் அவர்களும் சுண்டுக்குழி மகளீர் கல்லூரி அதிபர் திருமதி துசிகரன் அவர்களும் நடனத்துறைத் தலைவர் செல்வி மைதிலி அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அழைக்கின்றனர் திரு.சிவனேஸ்வரன் குடும்பத்தினர்

[:]

0 Comments