10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நியூநீர்வேலி இணையம் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகின்றது.

1601021_724332830917803_1272022918_n

நீர்வை மண்ணின் மைந்தர்கள் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றார்கள். நமது நாட்டில் நிலவிய குழப்பமான நிலைகளாலும் இன்னும் தொழில் முயற்சிகளுக்காகவும் தம் வாழ்வியலை வளப்படுத்தவும் அவர்கள் அவ்வாறு பல்வேறு நாடுகளுக்கும் சென்று வாழ்கின்றார்கள்.எனினும் அவர்கள் யாவருக்கும் தம் தாய்மண்ணான நீர்வை மண்ணில் ஒரு பிடிப்பும் பற்றும் தம் ஊர் என்ற அபிமானமும் நீடித்திருக்கின்றன. எனவே அவர்கள் இம்மண்ணோடு எப்பொழுதும் தொடர்பில் இருக்கவே விழைகின்றார்கள். இம்மண்ணுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தனிப்பட்ட முறையிலும் நிறுவனங்களாக இணைந்தும் அவர்கள் செயற்படுத்தி வருவதும் இதை நிரூபிக்கின்றது.இவ்வாறு எங்கிருந்தாலும் நீர்வை மண்ணுடன் நீடித்த உறவைப்பேண விழையும் நீர்வையின் மைந்தர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் நியூநீர்வேலி இணையம் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகின்றது.

நமக்கும் சில ஆண்டுகளாக ஒரு இணையத்தை ஊருக்காக நடத்திய அனுபவம் உண்டு. அவ்வகையில் இணையம் ஒன்றை தொடர்ந்து பேணி செய்திகளை குறைவின்றியும் தெளிவாயும் படங்களுடனும் போதிய விளக்கங்களுடனும் பதிவு செய்வது ஒரு கடின முயற்சி என்பதை நன்கு அறிவோம்.

இந்த வகையில் இந்தக்கடின முயற்சியை கனகச்சிதமாக சிறப்பாக நிகழ்த்தி நியூநீர்வேலி இணையத்தை செவ்வனே நடாத்தும் இவ் இணையக்குழுமமும் இணைய இயக்குனர் திரு.சசிகுமார் ஆசிரியர் அவர்களும் பாராட்டப்பெற வேண்டியவராகின்றார்.

எனவே இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து புதிய ஆண்டில் காலடி வைக்கும் நியூநீர்வேலி இணையம் இன்னும் சிறப்போடு பல்லாண்டுகள் நீர்வேலி ஊருக்கான தன்பணிகளை ஆற்ற வேண்டும் என்று நம் வழிபடு தெய்வமான செவ்வேட் பெருமான் திருவடிகளை சிந்தித்து வாழ்த்தி ஆசீர்வதிக்கின்றோம்.

‘நீர்வை மணி’ சிவஸ்ரீ.கு.தியாகராஜக்குருக்கள்
நீர்வை. தி.மயூரகிரி சர்மா

0 Comments

Leave A Reply