10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நியூ நீர்வேலி இணையத்தின் 6 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு..[:]

[:ta]

எதிர்வரும் 01.12.2018 அன்று  நியூ நீர்வேலி இணையத்தின் 6 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது நீர்வேலி கிராமத்தின் எல்லைக்குள் வாழ்கின்ற வசதி குறைந்த மற்றும்  தாய் தந்தையரை இழந்த அல்லது கற்றலுக்கு உதவி தேவைப்படுகின்ற  மாணவர்களுக்கு  புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது நீர்வேலி உறவுகள் மூலமாக உதவி செய்யவுள்ளோம். ஏற்கனவே பல மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் எமது இணையத்தினை அணுகி வருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களும் எம்மை அணுகியுள்ளனர்.  எனவே நாமும் நீர்வேலியில் உள்ள உதவி தேவைப்படும் மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம். தற்போது இரண்டு மாணவர்கள் A/L கற்பதற்காக உதவி கோரியுள்ளனர். இது உங்களின் கவனத்திற்கு. உதவி செய்ய விரும்புபவர்களுக்கு நாம் சேகரித்து வைத்துள்ள மாணவச் செல்வங்களின் விபரங்களை தருவதற்கு தயாராகவுள்ளோம். நீங்கள் அம்மாணவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை நேரடியாகவே செய்யவேண்டும். உண்மையாக உதவி தேவைப்படுவோர் தொடர்பான விபரங்களும் உதவி வழங்குவது தொடர்பான விடயங்களும் இணையத்தில் வெளியிடப்படும். தகவல்களும் செய்திகளும் உதவியினை பெற தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே இணையத்தினை சார்ந்தது. ஏனையவை உங்களையும் உதவி பெறுபவரையும் சார்ந்தது. நீர்வேலி மாணவச் செல்வங்களின் கல்வியினை மேம்படுத்துவோம். நன்றி

[:]

0 Comments

Leave A Reply