10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நியூ நீர்வை இணையம் நீர்வை மக்களின் இணைப்புப்பாலம்

asகடந்த இரண்டு வருடங்களாக எமது ஊருக்கு அளப்பெரும் சேவையினை வழங்கிவரும் நியூ நீர்வேலி இணையத்தினை நீர்வேலி வடக்கு ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினராகிய நாங்கள் அதன்பணி மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகின்றோம்;. பாரெங்கும் சிதறி வாழும் நீர்வை மக்களை இணையத்தினூடு இணைப்பது மட்டுமன்றி புலம்பெயர்தேசம் மற்றும் நீர்வையம்பதியில் எம்மவர்களால் நடாத்தப்பெறும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறியத்தருகின்றது. இது வளர்ந்துவரும் தொழில்நுட்பவுலகில் எம்மவரும் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை நிருபிப்பதோடு எம்மூரவரின் திறமையினையும் எடுத்தியம்புகின்றது. எல்லாவற்றிலும் மிகச்சிறந்த விடயம் என்னவென்றால் ஊரிலுள்ள பிரச்சனைகள மற்றும் தேவைப்பாடுகள் என்பவற்றை மிகவும் தெளிவாகவும் விரைவாகவும் செய்திகளினூடு தெரிவித்து; இயன்றளவில் அவற்றுக்கான தீர்வுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்பவர்களுக்கூடாக பெற்றுதருவதற்கான இணைப்புப்பாலமாக செயற்படுவதாகும். நீர்வை இணையமானது மென்மேலும் பலசேவைகளை உள்ளடக்கி வளர எமது மனதார வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
       நீர்வேலி ஸ்ரீ விநாயகர் சனசமூன நிலைய நிர்வாகசபை

0 Comments

Leave A Reply