10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நிலத்தில் இருந்து புலத்திற்கு நீர்வேலி இணையம்

Laleesan 2011 May

உலகெங்கும் பரந்து வாழும் நீர்வை உறவுகளை ஒன்றிணைக்கக் கூடிய சக்தியாக இன்று நீர்வேலி இணையம் விளங்குகின்றது. நீர்வேலி உறவுகள் எங்கெங்கு என்ன என்ன செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தெரியப்படுத்துவதோடு அவர்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்பவும் நீர்வேலி இணையம் அளப்பரும் பங்களிப்பை நல்குகின்றது. நீர்வேலியை மையப்படுத்தி ஓர் தொடர்பூடகம் அவசியமானது என்பதை உணர்ந்த எம்மூரின் படித்த இளைஞர்கள் காலத்திற்குக் காலம் இணைய சேவைகளைப் பயன்படுத்தி ஊருக்கான தளங்களை ஏற்படுத்தியிருந்தனர். இவர்கள் யாவரும் புலத்தை மையப்படுத்தியே சேவை புரிந்தனர். நிலத்தில் உள்ளோர் அவர்களுக்கு ஆதரவு நல்கினர். ஆனால் நிலத்தில் இருந்து ஊர் சார்ந்த தளம் ஒன்றை இயக்க முடியும் என்பதை இவ் இணையத்தினை இயக்கும் அன்பர்  நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் புலத்தில் உள்ள உறவுகள் இச்சேவைக்கு ஆதரவு நல்குகின்றமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.புதிய நீர்வேலி இணையம் என்ற பெயருடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நீர்வேலி இணையத்திற்கு இப்போது இரண்டு வயதாகிறது. இந்த ஈராண்டுகளில் இத்தளம் கண்ட வளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவு எம்மைப் பிரமிக்க வைக்கிறது.
நீர்வேலி இணையம் மேலும் மெருகுபெற்று எம்மூரிற்குப் பலம் சேர்க்க வாழ்த்துக்கள்.
‘நீர்வைக்கிழார்’ ச.லலீசன்
(பிரதி முதல்வர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)

1 Comment

  1. வாழ்த்துக்கள் ஆசிரியர் திரு. பா. சசிகுமார் அவர்களே
    தங்கள் சமூகப்பணி தொடர எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக !!!!! தங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று வாழ்த்துச்செய்தி அனுப்பாமைக்கு மன்னிக்க வேண்டும். சிலருடைய அசிங்க அரசியலுக்குள் நியூநீர்வேலி இணையம் சிக்கி தத்தளிப்பதை நான் விரும்பவில்லை. எது எப்படி இருப்பினும் என்னுடைய அன்பும் ஆதரவும் அனுசரணையும் என்றென்றும் இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்.

Leave A Reply