10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலிச் சந்தியில் இன்று(19.07.2014)விபத்து

10502025_1010582532302676_4757383081401770183_nநீர்வேலிச் சந்தியில் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெரிய வருவதாவது யாழ்ப்பாணத்தில்  இருந்து அச்சுவேலிக்கு  பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து  நீர்வேலிச்  சந்தியில் பயணிகளை  இறக்குவதற்காக  நிறுத்தப்பட்டபோது பேருந்திற்கு  பின்னால்  வேகமாக மோட்டார்  சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்தின் பின் பகுதியில் மோதியதில் மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின் பகுதிக்குள் நுழைந்தது இச்சம்பவத்தில் தெய்வாய்தினமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன் முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினார்.இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்றவர்களால் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

10421580_1010582378969358_6135556275737955587_n

10502025_1010582532302676_4757383081401770183_n

0 Comments

Leave A Reply