10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலியின் தற்போதய சனத்தொகைப்பரம்பல் – சிறிய அலசல் [:]

[:ta]

நீர்வேலியில் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இந்த மூன்று பிரிவுகளிலும் உள்ள மொத்த சனத்தொகையினை எடுத்துக் கொண்டால் மொத்தமாக 5 796 பேர் வாழ்கின்றனர். 1955 குடும்பங்களும் ஆண்கள் மொத்தமாக 2802 பேரும் பெண்கள் 2994 பேரும் காணப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ள தகவல்களின் அடிப்படையில் இத் தரவுகள் பெறப்பட்டுள்ளன. 1995 ஆண்டு நீர்வேலியில்  18 000 மக்கள் வசித்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.தற்போது மூன்றில் ஒரு பகுதியினரே தற்போது வாழ்கின்றனர்.

முன்னைய பாடசாலை நிலைகளில் அத்தியாரில் 1500 பிள்ளைகளுக்கு மேலும் சீ.சீ.த.க பாடசாலையில் 300 பிள்ளைகளுக்கு மேலும் கல்வி கற்றுள்ளனர். ஆனால் அத்தியாரில் 500 வரையான மாணவர்களே தற்போது கல்வி கற்கின்றனர். முன்னைய நாட்களில் மிகச்சிறிய வீடுகளில் அதிகளவான மக்களும் தற்போதய நீர்வேலியில் மிகப் பெரிய வீடுகளில் மிகக் குறைவான மக்களுமே வாழ்கின்றனர்.  கோவில்கள் ஒரு சிலவே காணப்பட்டன. அங்கு மக்கள் அலைமேதினர் திருவிழாக்காலங்களில். ஆனால் தற்போது வீட்டிற் கொரு கோவில் அமைத்து திருவிழா  செய்வது போல் திருவிழா நிறைய கோவில்களில் நடைபெறுகின்றது. ஆனால் அங்கு மக்களைக் காணக்கிடைப்பதில்லை.

நீர்வளமும் நிலவளமும் செழிப்பாக உள்ள எமது நீர்வேலியில் முழு வளங்களையும் பயன்படுத்துவதற்கு மக்களுடைய தேவை அதிகமாகவே உள்ளது. ஆனால் பிள்ளைகளுடைய பிறப்பு வீதம் குறைவாகவும் இறப்பு வீதம் அதிகமாகவும் காணப்படுகிறது. அண்மைய காலங்களில் நீர்வேலி தெற்கில் அதிகளவான இறப்புக்கள் நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

மக்கள் தொகை குறைவடைவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றது.

1) அதிகளவான மக்கள் வெளிநாடுகளை நோக்கி நகர்ந்தள்ளனர்.
அதிலும் நீர்வேலி வடக்கு மேற்கு பகுதிகளை விட நீர்வேலி தெற்கு பகுதிகளிலேயே அதிக
மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

2) குறைந்த பிறப்பு வீதம்
அதிகரித்த இயந்திர வாழ்க்கையினாலும் நாகரீகப் போர்வையினாலும் ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையை மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். சிலர் அதுவும் வேண்டாம் என்று வேலை வேலை என அலைகின்றனர். முன்னைய காலங்களில் ஒவ் வொரு குடும்பங்களிலும் 8 பிள்ளைகள் 10 பிள்ளைகள் என காணப்படுவார்கள். தற்போது அவ்வாறில்லை.

3) அதிகரித்த இறப்பு வீதம்
நீர்வேலியில் அதிகரித்த வயோதிபர்கள் காணப்படுகின்றனர். இவரகளுடைய பிள்ளைகளில் அனேகமானவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான மருந்துகள் ஆரோக்கிய உணவுகள் பராமிரிப்புக்கள் இன்றி கவலையுடன் வாழ்கின்றனர். இதனால் வயோதிப மரணங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

மீண்டும் பழைய பதிவுகளை மிஞ்சி சனத்தொகை நீர்வேலியில் வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள் எம்மவர் மத்தியில் வளர வேண்டும்.

நன்றி[:]

0 Comments

Leave A Reply