10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலியின் வட்டாரங்களும் அதற்குள் அடங்கும் வீதிகளும்[:]

[:ta]

நீர்வேலியின் வட்டாரங்களும் அதற்குள் அடங்கும் வீதிகளையும் தற்போது நீர்வேலியில் வாழும் மக்களும் இளையவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக பிரதேச சபையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்கள் பெறப்பட்டுள்ளன. நீர்வேலியில் வாழும் அனைவரும் நீங்கள் எந்த வீதிக்குள் வதிகின்றீர்கள் என்பதனை உறுதி செய்து அவ் வீதிகளுக்கு நீங்களாகவே அல்லது உங்கள் செலவில் பெயர்பலகையினை அமைத்து வைப்பது உங்களின் தலையாய கடமையாகும். அத்துடன் பதியப்படாத வீதிகளில் வதிவோர் அவ் வீதிக்கு பெயர் இருந்தால் அவ் வீதியில் உள்ள அனைவரும் கையொப்பம் இட்டு பிரதேச சபையில் சமர்ப்பிக்கமுடியும். பெயர் இல்லாத ஒழுங்கைகளுக்கு அவ் வீதியில் வதியும் அனைவரும் இணைந்து ஒரு பெயரினை வைத்து அதனை பதிவு செய்து கொள்ளமுடியும்.  தற்போது வாழும் சிறுவர்களுக்கும் இளவயதினர்களுக்கும் பழைய தகவல்களை வழங்க வேண்டியது பெரியவர்களாகிய உங்கள் கடமையாகும். 

[:]

0 Comments