10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலியில் இப்படியும் ஒரு பாதிப்பு

நீர்வேலியின் கிழக்குப்பகுதியான பன்னாலையில் (நீர்வேலிச்சந்தியில் இருந்து கிழக்குப்பக்கமாக செல்லும் வீதி) அண்மையில் பெய்த மழைகளால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.மழையின் போது பாதுகாப்பாக இருப்பதற்கு எந்தவிதமான வசதியுமற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியைச் சேர்ந்த வசதிபடைத்தவர்கள் பன்னாலைப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒருவர் அல்லது சிலர் இணைந்து சிறிய வீடு ஒன்றினை அமைத்துக் கொடுக்கவேண்டும்.முடிந்தால் இதனை நீர்வேலியைச் சேர்ந்த அனைவருக்கும் பகிருங்கள்.இது இணையத்தின் நேரடி அவதானிப்பின் மூலமும் அவர்களுடன் பேட்டி கண்ட பின்னர் பெறப்பட்ட தகவல்கள் ஆகும்.

0 Comments

Leave A Reply