10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலியில் இருந்து புதிதாக ஆன்மீகச் சஞ்சிகை

444சனாதனி என்ற பெயரில் ஆன்மீகச் சஞ்சிகை ஒன்று நீர்வேலியில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கிறது.  நீர்வை தி.மயூரகிரி சர்மாவை ஆசிரியராகக் கொண்டு சனாதன சேவா பீடத்தினரால் இது வெளியீடு செய்யப்படுகின்றது. காலாண்டிதழாக மலரத் தொடங்கியிருக்கும் இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் ஐயப்பன் வழிபாடு குறித்த சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 20.12.2014 நீர்வேலி செல்லக்கதிர்காம தேவஸ்தானத்தில் இடம்பெற்றது. நீர்வை மணி கு.தியாகராசக் குருக்கள் சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார். சஞ்சிகையைப் பெறுவதற்கும் தொடர்புகளுக்கும் தி.மயூரகிரி சர்மா, அரசகேசரிப் பிள்ளையார் கோவிலடி நீர்வேலி, தொலைபேசி 0778680452 (சஞ்சிகை ஒன்றின் விலை 60 ரூபா ஆகும்) 

s

444

0 Comments

Leave A Reply