நீர்வேலியில் காற்றினால் வாழைகள் முறிந்து நாசமாகின
21.05.2020 வியாழக்கிழமை நீர்வேலியில் வீசிய பலமான காற்றினால் வாழைகள் முறிந்து நாசமாகின. நீர்வேலியின் கரந்தன் மாசிவன் மற்றும் அச்செழு சிறுப்பிட்டி ஆகிய இடங்களில் பெருமளவு வாழைகள் முறிந்து நாசமாகின. அண்மையில் கொரணா ஊரடங்கினால் வாழைக்குலைகளை விற்க முடியாமல் இருந்தனர் .தற்போது ஒரளவு அதிலிருந்து மீண்டுவந்து இதரை வாழை 45 ரூபா வரையிலும் கதலி 35 ரூபா வரையிலும் விற்கப்பட்டு வந்துள்ள நிலையில் காற்றின் இன்றைய அழிவு பெரும் நட்டத்தினை ஏழை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
0 Comments