10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலியில் தொடர் மழையினால் வெங்காயச் செய்கை பாதிப்பு

10712883_1117556631605265_8280939850277861022_nயாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே பெய்துவரும் பருவமழையினால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். விதை வெங்காய உற்பத்திக்காக மேட்டுநில வெங்காயச் செய்கையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்குப் பகுதியின் அச்சுவெலி ஆவரங்கால் புத்தூர் சிறுப்பிட்டி நீர்வேலி போன்ற பிரதேசங்களில் வாழும் விவசாயிகளின் வெங்காயத் தோட்டங்களே தொடர்ச்சியான மழையின் காரணமாக முழுமையாக அழிவடைந்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் வெங்காயச் செய்கையில் ஏற்பட்ட இவ்அழிவு நிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் விதை வெங்காயத்தின் விலை உச்சமடையலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.(நன்றி- நீர்வேலி வடக்கு செய்தியாளர் செ.நீருஜன்)

0 Comments

Leave A Reply