[:ta]நீர்வேலியில் பெரியார்களுக்கு சிலை வைக்கப்படவுள்ளது.[:]
[:ta]
கந்தையா வேதவல்லி அவர்களுக்கு மாதர்சங்கத்தின் காணியில் சிலை வைப்பதற்காக மாதர்சங்கத்தினுடைய தற்போதய தலைவர் திருமதி ருக்மணி ஆனந்தவேல் அவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது . இது காலத்திற்கு மிகவும் அவசியமான செயலாகும். நீர்வேலியில் எத்தனையோ பெரியார்கள் வாழ்ந்து தற்போது மறைந்து போனார்கள். அவர்கள் பற்றிய வரலாறு இன்றைய இளைய சமூகத்தினருக்கு தெரிவதில்லை. அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதும் இல்லை. எமது ஊரின் பாரம்பரியத்தினையும் வரலாற்றினையும் எமது இளஞ் சமூகத்திற்கு கடத்தவேண்டிய பொறுப்பு ஊரில் வாழ்கின்ற வயதில் மூத்தவர்களுக்கு உண்டு. அத்தியார் இந்துக் கல்லூரியில் அத்தியார் சிலையும் நீர்வேலி வாழைக்குலைச்சங்கத்தின் முன்னால் பபாராளுமன்ற உறுப்பினரின் சிலை மட்டுமே நீர்வேலியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக நீர்வேலியின் வளர்ச்சியில் பாடுபட்ட அனைவருக்கும் அவர்களுக்குரிய இடங்களில் சிலை நிறுவப்படல் வேண்டும். கந்தையா வேதவல்லி அவர்களுக்கு மாதர்சங்கத்தின் காணியில் சிலை வைப்பதற்காக மாதர்சங்கத்தினுடைய தற்போதய தலைவர் திருமதி ருக்மணி ஆனந்தவேல் மற்றும் அதற்காக உழைக்கின்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
0 Comments