10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் மனையடி சாத்திர நூல் வெளியீடு

01-1நீர்வைமணி பிரம்மஸ்ரீ கு. தியாகராஜக் குருக்கள் எழுதிய மனையடி சாஸ்திரம் என்ற நூலின் வெளியீட்டு விழா 22.09.2016 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நீர்வேலி இராச வீதியில் உள்ள பொன் செல்வமகால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள வணிகபீடப் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

வேதபாராயணத்தை மயிலணி பிரம்மஸ்ரீ நா.சிவமனோகரசர்மாவும் திருமுறை பாராணயத்தை பிரம்மஸ்ரீ சா.கோபாலசர்மாவும் நிகழ்த்துவர். வரவேற்புரையை நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ சா.சோமதேவக் குருக்களும் ஆசியுரையை பிரம்மஸ்ரீ சா.சோமாஸ்கந்தக்குருக்களும் நூல் அறிமுகவுரையை ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.குணநாதனும் நூல் ஆய்வுரையை பிரம்மஸ்ரீ ப. சிவானந்தசர்மாவும் (கோப்பாய் சிவம்) வழங்குவர். யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் பிரம்மஸ்ரீ க.நிரஞ்சன சர்மா நன்றியுரை ஆற்றுவார்.

நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் வரைபடங்கள், விளக்கக்குறிப்புகள், ஆய்வுச்செய்திகள், வீடு கட்டமுன் கவனிக்க வேண்டியவை, கட்டிய பின் செய்ய வேண்டியவை,

வாஸ்து பற்றிய சாத்திர விளக்கங்கள், நமது மண்வாசனை சார் கருத்துக்கள் என்று எமது தனித்துவமான பாரம்பரிய மனையடி சாத்திர மரபுகளை அனுபவ வழி நின்று பேசும் நூலாக இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

01-1

03-102-1

0 Comments

Leave A Reply