10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் மூன்று வீடுகளில் திருட்டு

யாழ்ப்பாணம், நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் நேற்று நள்ளிரவு மூன்று வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுகரந்தனில் உள்ள நாகராசா என்பவரது வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் ரான்ஸ்போமரடி கிளியர்  வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் மூன்றாவது பிள்ளையான் என்பவரது  வீட்டில் துவிச்சக்கர வண்டியும்  திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முகமூடி அனிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட குழவினரே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

நீர்வேலி கரந்தனில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 Comments