10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் வாழ்ந்த பெரியார்களை நினைவுகூர்வதற்கு விரும்புகிறீர்களா?

எமது ஊரில் பிறந்து வளர்ந்து உமது ஊருக்காகப் பாடுபட்டு தற்போது காலமாகிப்போன பெரியார்கள் பலர் இருந்நிருக்கின்றனர்.அவர்களின் நினைவுகளை மீட்பதற்கும் அப்பெரியார்களின் சேவையினை இளைய சந்ததியினரும் அறிவதற்காக தொடர்ச்சியாக வெளியிட விரும்புகிறோம்.ஒவ்வொரு பெரியாரைப்பற்றியும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைபற்றியும் நீர்வை மண்ணுக்கு அவர்களது சேவைபற்றியும் உங்களுக்கு தெரிந்திருந்தால் அல்லது அவர்களது உறவினர்கள் அப் பெரியார்களை நினைவுகூர்வதற்கு விரும்பின் அவர்கள் தொடர்பான தகவல்களையும் படங்களையும் அனுப்பிவைத்தால் உடனடியாக அதனை எமது இணையத்தில் வெளியிடத்தயாராகவுள்ளோம்.உங்களுக்கு தெரிந்த தகவல்களை ஒன்று சேர்த்து தொகுத்து அனுப்பினால் இணையத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.எமது ஊர் பெரியார்களை நினைவுகூர்வது என்பது எமக்கும் எமது ஊருக்கும் பெருமைதேடித்தருகின்ற விடயமாகும்.(நன்றி)

1 Comment

  1. Name* says: - reply

    அண்மைக் காலமாக நீர்வேலியில் பிறந்து வாழ்ந்த பெரியோர்கள் நினைவு கூறப்பட்டுக்கொண்டு வருகின்றார்கள். முக நூல்களில் அவர்களைப்பற்றிய விபரங்களை எழுதி வருகின்றார்கள் வரவேற்கதக்கது. இதற்கு காரணமானவர் நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. ஜீவா அவர்கள். அவர் தான் நீர்வேலிப் பெரியவர்களை அவர்களின் சேவைகளை கௌரவிக்க வேண்டும் என்றும் அவர்களைப் பற்றி இன்றைய இளம் சந்ததியினருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும்
    வாழையடி வாழை நிகழ்ச்சியின் போது அவர்கள் பெயர்களில் அரங்கம் அமைத்து விழா நடாத்த தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு முதலியார் அத்தியார் அருணாசலம் அரங்கம், 2012 ஆம் ஆண்டு
    பெரிய உபாத்‌தியாயர் செல்லப்பா நடராசா அரங்கம், இந்த வழியில் இவ்வருடம் ஆசிரியர் கந்தையா அரங்கம். well done N. W. A கனடா.

Leave A Reply