10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் விபத்து கன்ரர் மோதி படுகாயங்களுடன் குடும்பஸ்தர்

நீர்வேலியில் விபத்து கன்ரர் மோதி படுகாயங்களுடன் குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில்நீர்வேலிச் சந்திப் பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்தவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேகமாக வந்த கன்ரர் வாகனம் மோதியதில்படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது-45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தகரை யாழில் இருந்து வேகமாக வந்த வீதி அகலிப்பு வேலையில் ஈடுபடும் கன்ரர் வாகனம் மோதியதில் பலத்த படுகாயமடைந்து உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு கொண்டுசெல்லப்பட்டார். அங்கிருந்து உடனடியாக மேலதி சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் நீர்வேலிச் சந்தியிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் (யாழ்ப்பாணப் பக்கம்) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பயணித்தவரின் துவிச்சக்கரவண்டி சுசுக்குநூறாகின


விபத்து இடம்பெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு விபத்தினை ஏற்படுத்திய கன்ரர் வாகனத்தையும் ஓட்டுனரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக் கொண்டுசென்றனர்.இதேவேளை கடந்த வாரம் அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகிலும் விபத்து இடம்பெற்று இதனுடன் இரண்டாவது விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

2sasikkk

0 Comments