10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் விபத்து.சம்பவத்தை பார்த்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஹயஸில் மோதி காயம்

10174971_889122531115344_5469763324699933971_nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் இன்று மாலை 5.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் விபத்து நடந்ததை திரும்பிப் பார்த்தவர் ஹயஸில் மோதி காயமடைந்தார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இளைஞர் ஒருவரை பின்னால் வந்த ஹன்ரர் வாகனம் ஒன்று அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் இருக்கும் வளைவில் திரும்பும் போது அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை மோதியது இதனால் அவ் இளைஞர் சரிந்து கீழே வீழ்ந்தார். சம்பவத்தில் மோதிய ஹன்ரர் வாகனம் மோதியதும் நிறுத்தாது சென்றுவிட்டது.

இந்த விபத்து நடந்த சத்தத்தை கேட்டு பருத்தித்துறைப் பக்கமாக இருந்து யாழ்நோக்கிச் சென்ற ஹயேஸ் வாகனம் ஒன்றின் சாரதி திடீரென நிறுத்தி சம்பவத்தை பார்த்தார். இந்த வாகனம் நிற்பதை கவனிக்காது ஹயஸ் வாகனத்தின் பின் (டிஸ்கவரி) மோட்டார் சைக்கிளில் வந்த வங்கி ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் விபத்தை பார்த்தவண்ணம் வந்து முன் நின்ற ஹயஸ் வாகனத்தின் பின்னால் மோதினார். இதனால் முகத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தில் ஹன்ரர் மோதிவீழ்ந்தவர் சிறிது நேரத்தின் பின் தனது மோட்டார் சைக்கிளில் வீடு சென்றுவிட்டார்.

1513739_889122144448716_7411028906573825003_n10174971_889122531115344_5469763324699933971_n

0 Comments