10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு புதிய இணையத்தளம்

qநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் உத்தியோக பூர்வமான இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.attiarhinducollege.org இவ் இணையத்தளத்தின் ஊடாக நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் செயற்திட்டங்கள், அடைவு மட்டங்கள், நிகழ்வுகள் போன்ற தகவல்களை  மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் யாவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எதிர்காலத்தில்  அத்தியார் இந்துக் கல்லூரியை மேலும் முன்னேற்றுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை  பாடசாலைச்சமூகம் எதிர்பார்க்கின்றது. இதன் மூலம் நீர்வேலியில் ஒரு மிகச் சிறந்த கல்விச் சாலையாக இப்பாடசாலை திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. (இணையத்தள ஆக்கம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.)

0 Comments

Leave A Reply