10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரின் சேதமடைந்த கூரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் நுழைவாயில் உள்ள வகுப்பறைக் கட்டடத்தின் மேல் மாடிக் கூரைப் பகுதி சேதமடைந்துள்ளமையால் மரச்சிலாகை உக்கி சில ஓடுகள் விழுந்து உடைந்த சம்பவம் பெப்ரவரி மாதமளவில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அபாயமான சூழ்நிலை நிலவியது. சம்பவத்தையடுத்து உடனடியாக பாடசாலை அதிபர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அறிவித்ததுடன் இதனையடுத்து தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (TO) வந்து பார்வையிட்டு கட்டடத்தின் 70 அடி வரை கூரை வேலைகள் செய்து தருவதாக கூறிச் சென்றனர். எனினும் பல நாட்களாகியும் ஆகியும் இதனைச் செய்து தரவில்லை.
இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து பத்திரிகைகள், இணையத்தில் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானதையடுத்து யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் பேசியதுடன் உடனடியாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இதனையடுத்து கூரையினை புனரமைப்பதற்கு 3 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு பாடசாலைக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இன்று ( 21) கட்டடத்தின் கூரை புனரமைப்புக்காக ஓடுகள் கழற்றப்படும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

0 Comments

Leave A Reply