10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி அத்தியார் பாடசாலைக்கு அருகில் விபத்து

தீ அணைப்பு வாகனம் விபத்து; ஒருவர் பலி. இருவர் படுகாயம்..

கடும் வேகத்தில் சென்ற யாழ். மாநகர சபையின் தீ அணைப்பு வாகனத்தின் முன் ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மூன்றுமுறை குத்துக்கரணம் அடித்து அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவலம் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் சற்று முன்னர் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீ அணைப்பு வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அரியரட்ணம் சகாய்ராஜா (வயது- 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனம் கடும் வேகமாக பருத்தித்துறைபக்கமாக சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

0 Comments

Leave A Reply