நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் கோவில் கொடியேற்றம்.

துண்டு.
அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பரராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான்தோன்றியாக உருவாகிய தீர்த்தம் இருப்பதாகவும் கனவுகண்டார்.
அடுத்தநாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவுகண்டபடி குறிப்பிட்ட இடத்துக்குவந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக் கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து
வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப்பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார்.
இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் சிவாலயம்
அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமும் சிவனுக்குரிய ஆலயமுமாக இரட்டை மூலஸ்தானம் கொண்டமைத்துப் பிரதிஷ்டை செய்தார்.
வருடாந்தம் ஆவணிச் சதுர்த்திக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் மகாஉற்சவம் ஆரம்பமாகும்
0 Comments