10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் முதியவர்களுக்கான உதவி

நீர்வேலி தெற்கு நீர்வேலி குருந்தடி வீதியைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வதியும் இராமநாதன் தயானந்தன் தனது மறைந்த தந்தையார் வேலுப்பிள்ளை இராமநாதன் ஞாபகார்த்தமாக 08.05.2020 வெள்ளிக்கிழமை 40 தெரிவு செய்யப்பட்ட முதியவர்களுக்கு உணவுப்பொருட்களினை நீர்வேலி இணையத்தினூடாக வழங்கினார். ஒருவருக்கு 1250 ரூபா பெறுமதியான முதியவர்களுக்குரிய அத்தியாவசியப்பொருட்களினை இணையத்தினை சேர்ந்த இளைஞர்கள் முதியவர்களினுடைய வீடுகளிற்கு நேரடியாகச் சென்று வழங்கினர். நிதியுதவி புரிந்த திரு.இராமநாதன் தயானந்தன் அவர்களுக்கும் அரும் பெரும் சேவையாற்றிய இளைஞர்களுக்கும் எமது இணையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

 

0 Comments

Leave A Reply