10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி இளைஞரின் தயாரிப்பில் ”சினங்கொள் ” திரைப்படம்

நீர்வேலி வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த கனடாவில் வதியும் றஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் தயாரிப்பில் ”சினங்கொள் ” திரைப்படம் 03.01.2020 ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் 20 நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன. நீர்வேலி உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் படமாக்கப்பட்ட இப்படத்தினை இந்தியாவில் பல சினிமாத்துறை சார்ந்தவர்கள் வாழ்த்தி இருப்பதுடன் நல்ல துறைசார்ந்த விமர்சனங்களையும் வழங்கியுள்ளனர்.”துரோகம்”, “காசுமரம்” போன்ற படத்தின் பின்னர் இயக்கும் படமிதுவாகும்.அத்துடன் றஞ்சித் ஜோசப் அவர்கள் ரோஜாக்கூட்டம் சொல்லாமலே போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு.சசி அவர்களின் கீழ் உதவி இயக்குனராக கடமையாற்றியிருந்தார்.எனவே பல நாடுகளிலும் வாழும் எமது நீர்வேலி உறவுகள் அனைவரும் ”சினங்கொள் ” திரைப்படத்தினை திரையரங்குகளிற்கு சென்று பார்வையிட்டு றஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு  எமது நீர்வேலி  இணையம் கேட்டுக்கொள்கின்றது.0 Comments

Leave A Reply