10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் – தொண்டர்சபை அமைத்தல்[:]

[:ta]முருகன் அடியார்களே !

எல்லாம் வல்ல கடம்ப விருட்ச நிழலின் கீழ் அடியவர்களுக்கு அனுக்கிரகிக்கும் பெருங்கருணை நோக்குடன் வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளி வீற்றிருக்கும்  நீர்வைக்கந்தனின் பேரருளால் அன்பின் அடியவர்களாகிய உங்கள் துணை கொண்டு  ஆலய நலன்களை கவனிப்பதற்கு என ஓர் தொண்டர் சபையை ஏற்படுத்தவேண்டுமென ஆலய பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர். இதற்கு அமைவாக நீர்வையம்பதியில் வதியும் ஆண்கள் பெண்கள்  இருபாலாரும் இச்சபையில் உள்வாங்கப்படுவார்கள். தங்களது இறைபணியை ஈடுபடுத்தும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. பின்வரும் தகமைகளை கொண்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.

1) நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும்

2) இந்து சமயத்தவராக இருத்தல் வேண்டும்

3) வயது எல்லை கிடையாது

4) தொண்டுகள் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும்

5) ஆலயத்திற்கு வருகைதருபவர்களாக இருக்கவேண்டும்

6) ஆலய குருக்கள்மார்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் இணைந்து செயற்படுதல்.

நீர்வேலி கந்தசுவாமி கோவில் – தொண்டர்சபையில் சேர விரும்புபவர்கள் காரியாலயத்தில் பதிவு செய்யவும்.

”கந்தனின் பேரருள் யாவருக்கும் கிட்டுமாக”

 

இங்ஙனம்

ஆலய பரிபாலன சபை.

 [:]

0 Comments