10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் திரு.த.சோதிலிங்கம் அவர்கள் தெரிவு[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவிலில்  30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் அடிப்படையில் புதிய நிர்வாகசபை புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தலைவராக திரு தம்பிமுத்து சோதிலிங்கம் அவர்கள்  தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல வருடங்களிற்கு முன்னர் கடும் போர் நடைபெற்ற காலங்களிலும் பஞ்சம் பட்டினி என மிக நெருக்கடியான காலகட்டங்களிலும்   நீர்வைக்கந்தனில்  தலைவர் பதவியினை வகித்து கந்தப்பெருமானின் நிகழ்வுகளை மிகச்சிறப்பாக வழிநடத்தியிருந்த   இருந்த திரு.த.சோதிலிங்கம் அவர்கள்  நீண்ட இடைவெளியின ்பின்னர் மீண்டும் நீர்வைக்கந்தன் ஆலயத்தில் பரிபாலனசபை தலைவராக   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   அத்துடன் பொருளாளராக திரு.பொ.பவானந்தன் ஆசிரியர் அவர்களும் செயலாளராக திரு.வி.ஆதவன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நீர்வைக்கந்தனைப் பொறுத்தவரையில் பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுகின்றது. அதிகளவான பக்தர்களை கோவிலுக்கு வரவழைக்கவேண்டிய கடைப்பாடு  இப் புதிய நிர்வாகத்திற்கு உண்டு. ஆகவே புதிய தலைவர் பொருளாளர் செயலாளர் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

[:]

0 Comments

Leave A Reply