10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அதிபர் இடமாற்றம்

vvvகடந்த எட்டு ஆண்டுகளாக நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய வாகீசன் அவர்கள்  நீர்வேலி மக்களின் அபிமானத்தைப் பெற்ற அதிபராகவும் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் உயர்ச்சியில் பேசப்படக்கூடிய அதிபராகவும் விளங்குகின்றார். கரந்தன் பாடசாலை பௌதிக வள விருத்தி, மனித வளவிருத்தி என பல துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு மூலகாரணராகச் செயற்பட்டவர் வாகீசன். புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் 15 ஆண்டுகள், ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் பணியாற்றி கல்லூரிச் சமூகத்தினரிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அச்சுவேலி, இடைக்காடு மகா வித்தியாலயம் (1ஏபி) பாடசாலையின் அதிபராக குழந்தைவேலு வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.எமது ஊர்பாடசாலையின் வளர்ச்சியில் கணிசமான பங்கினை ஆற்றிய அதிபர் வாகீசன் அவர்களுக்கு நீர்வேலி இணையம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

 

0 Comments