10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி சந்தியிலிருந்து புறப்படும் 800 இலக்க பஸ் சேவையினை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கைநீர்வேலி சந்தியிலிருந்து புறப்படும் 800 இலக்க பஸ் சேவையினை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை[:]

[:ta]நீர்வேலிச் சந்தியில் இருந்து அச்செழு குறுக்கு வீதி ஊடாக புன்னாலைக்கட்டுவன் மூன்றாம் சந்தி ஊடாக யாழ்.நகருக்கான 800 இலக்க வழித்தடம் பஸ் சேவை 6 மாதங்களுக்கு மேலாக இடம்பெறாதுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பஸ் சேவை யுத்தத்தின் பின்னர் கடந்த 2015 ஏப்ரல் ஆரம்பமானது. இந்நிலையில் தற்போது திடீரென இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் தரப்பினர் தினம் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே இச்சேவையினை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து கோண்டாவில் பஸ் சாலையின் அதிகாரியொருவரிடம் கேட்டபோதும் ஆளணிப் பற்றாக்குறையால் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக பதிலளித்ததுடன் புதியவர்கள் இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

[:]

0 Comments

Leave A Reply