10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி சீயாக்காடு இந்துமயான வீதியில் பாலம் அமைத்தல்

IMG_3585மேற்படி இந்து மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ சேமக்காலைக்கும் இறுதிக்கிரிகைகளை மேற்கொள்ளவரும் மக்கள் மழைகாலத்தில் ஏற்படும்’ சிரமங்களைத் தவிர்க்க மேற்படி வீதியில் உள்ள வாய்க்காற்பகுதியை பாலம் அமைத்துத் தருவதற்கு புலம் பெயர்ந்து வாழும் நீர்வேலி மண்ணின் புதல்வர்கள் திரு.கணபதிப்பிள்ளை நடனபாதம் (டென்மார்க்) மற்றும் அவரின்  நண்பர்  குழாம்  திரு.தியாகராஜா  ஜெகநீதன்   ஜேர்மனி மற்றும் அவரின் நண்பர் குழாம் இப்பாலம் அமைக்கும் பணிக்கான நிதியை திரு. கு.இராஜசிங்கம் ஊடாக மேற்கொண்டுள்ளனர்.

இவ்வேலைகளுக்கு வலி கிழக்கு பிரதேச சபையினரும் நீர்வேலி சீயாக்காடு அபிவிருத்திச் சபையினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கிவருகின்றனர்.மேலும் இதற்கான நிதியினை செலுத்தும் அன்பர்களின் பெயர் விபரங்கள் முழுமையாக கிடைக்கும் போது அறியத்தரப்படும். மயான புனரமைப்பு பணிகள் பல இருப்பதால் இவர்களுடன் இணைந்து இம்மயானத்தை ஓரு புனித பிரதேசமாக ஆக்குவதற்கு உதவுவீர்கள் என உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் 18.04.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது.

IMG_3591

IMG_3590IMG_3588IMG_3587IMG_3586IMG_3585IMG_3583IMG_3582IMG_3581IMG_3580IMG_3578

0 Comments

Leave A Reply